சைஃப் அலி கானின் வீட்டிற்குள் நுழைந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதாக குற்றச்சட்டில் கைது செய்யப்பட்ட குற்றவாளி முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷாசாத் 6 மாதங்களுக்கு முன்பு வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு வந்து மும்பையில் உள்ள ஒரு வீட்டு பராமரிப்பு நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷாசாத் கடந்த 6 ஆண்டுகளாக மும்பையில் வசித்து வருவதாக அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சைஃப் அலி கான் தாக்குதல் வழக்கில், மும்பை காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷாசாத்தை மும்பையில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது.காவல்துறை தகவல்களின்படி, குற்றம் சாட்டப்பட்ட ஷரிபுல் 6 மாதங்களுக்கு முன்பு மும்பைக்கு வந்தார். அவர் 6 மாதங்களுக்கு முன்பு பங்களாதேஷிலிருந்து வந்து திடீரென காணாமல் போனார். 15 நாட்களுக்கு முன்பு மும்பையில் மீண்டும் சுற்றித் திரிந்துள்ளார்.அதற்கு இடைப்பட்ட நாட்களில் அவர் எங்கே இருந்தார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இடைப்பட்ட காலத்தில் அவர் மீண்டும் வங்கதேசத்திற்குச் சென்று அங்கிருந்து ஏதாவது இலக்குடன் மும்பைக்குத் திரும்பி வந்தாரா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

முகமது ஷரிபுல் மும்பையில் ஒரு வீட்டு பராமரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்தபோது. அவர் பாலிவுட் நட்சத்திரங்களின் வீடுகள் பற்றிய தகவல்களைச் சேகரித்து, அங்கு சென்று வீடியோக்களை உருவாக்கியுள்ளார். அவர் அந்த வீடியோக்கள், புகைப்படங்களை வங்கதேச எண் 0088 ல் உள்ள ஒருவருக்கு பகிர்ந்து கொண்டுள்ளார்.ஜனவரி 16 ஆம் தேதி, வங்கதேசத்தை சேர்ந்த முகமது ஷரிபுல் நள்ளிரவு 2 முதல் 2.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சைஃப் அலி கானைத் தாக்கியுள்ளார். சம்பவம் நடந்த அதே நாளில், ஜனவரி 16 ஆம் தேதி, முன்னாள் பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் ஹுசைன் சவுத்ரி, சைஃப் அலி கான் மருத்துவமனையில் இருப்பதாக ட்வீட் செய்துள்ளார். ''அவரது வீட்டிற்குள் நுழைந்த ஒருவரால் அவர் ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டார். அந்த முஸ்லிம் நடிகர் ஆபத்தான நிலையில் உள்ளார். இந்து மகாசமாஜத்தின் வளர்ச்சியால், முஸ்லிம் திரைப்பட நட்சத்திரங்கள் இந்தியாவில் பாதுகாப்பாக இல்லை. அவரது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் உள்ளது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் எழுந்து நின்று இந்திய முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்'' என்று பதிவிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: நான் ஒரிஜினல் வில்லன்டா..! சைஃப் அலிகான் வழக்கில் சவால் விடும் நிஜ குற்றவாளி... வெறும் கையைப் பிசையும் காவல்துறை..!

இந்தியாவில் ஒரு திரைப்பட நட்சத்திரம் மீதான தாக்குதல் குறித்து இவ்வளவு விரைவாக ட்வீட் செய்து, பிரச்சினையை இந்து-முஸ்லீம் பிரச்சினையாக மாற்ற முன்னாள் பாகிஸ்தான் அமைச்சர் ஏன் இவ்வளவு அவசரமாக பதிவிட்டார்? வங்கதேச குடிமகனான ஷரிஃபுல் முகமது 15 நாட்களுக்கு முன்பு வங்கதேசத்திலிருந்து வந்திருந்தார். அதாவது, அவர் இந்தியாவிலிருந்து வங்காளதேசத்தின் ஜலோகதி மாவட்டம், ராஜ்பரியா என்ற தனது கிராமத்திற்குச் சென்றாரா? முகமது ஷரிபுலுக்கு கொள்ளையடிக்கும் எண்ணம் இருந்திருந்தால், அவர் ஏன் சைஃப்பின் வீட்டிலிருந்து எதையும் திருடவில்லை? சைஃப் அலிகானையும் அவரது பணிப்பெண்களையும் நேரடியாக கத்தியால் தாக்கியது ஏன்? என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

இப்போது இந்த வழக்கில், ஒரு வெளிநாட்டவர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து ஒரு பெரிய இந்திய திரைப்பட நட்சத்திரத்தைக் கொல்ல முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) இந்த வழக்கை விசாரித்து வருகின்றன. முகமது ஷரிபுல் மும்பைக்கு வந்ததற்கான நோக்கத்தைக் கண்டறிய,அவர் எத்தனை திரைப்பட நட்சத்திரங்களின் வீடுகளை ன்நோட்டமிட்டார்? வங்கதேசத்தில் உள்ள யாருடன் அவர் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்? மும்பையில் அவருக்கு எங்கிருந்து குடியிருப்புச் சான்று கிடைத்தது? மொபைல் சிம் கார்டை எந்த அடிப்படையில் பெற்றார்? எத்தனை சிம் கார்டுகளை வாங்கினார்? மும்பையில் இதுவரை வெளிவராத வேறு ஏதேனும் குற்றங்களைச் செய்திருக்கிறாரா? என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: பாதுகாப்புக்காக ஆண்டுக்கு ரூ.1,000 கோடி செலவிடும் பிரபலம்.. 'பாடிகார்டு'களுக்கு மாதம் கோடிகோடியாய் சம்பளம் தரும் சினிமா நட்சத்திரங்கள்..!