2025 ஆம் ஆண்டின் தொடக்கம் நடிகர் சைஃப் அலி கானுக்கு மிகவும் மோசமாகவே அமைந்தது. ஜனவரி 16 ஆம் தேதி, திருடும் நோக்கத்துடன் ஒரு நபர் சைஃப் அலிகானின் வீட்டிற்குள் நுழைந்தார். இதை அறிந்த சைஃப் அலிகான், அவரை நோக்கி ஓடினார். அப்போது அந்த சைஃப் அலிகானை கத்தியால் ஆறு இடங்களில் குத்தி தாக்கினார். உயிருக்குப் போராடி சிகிச்சை பெற்று குணமாகி உள்ள அவர், தாக்குதலுக்குப் பிறகு முதன்முறையாக நேர்காணலில் நடந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் அன்றைய சம்பவம் முழுவதையும் விவரித்துள்ளார்.
''எனது உயிரைக் காப்பாற்றுவதில் எனது பணிப்பெண் கீதா மிகப்பெரிய பங்காற்றினார். தாக்குதல் நடந்த இரவுக்கு சற்று முன்பு, கரீனா ஒரு விருந்துக்குச் சென்றிருந்தார். மறுநாள் காலையில் எனக்கு சில முக்கியமான வேலைகள் இருந்ததால் க்ரீனாவுடன் விருந்துக்கு செல்லாமல் நான் வீட்டில் இருந்தேன்.கரீனா திரும்பி வந்ததும், இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு தூங்கச் சென்றோம். நள்ளிரவு 2 மணியளவில், எனது வீட்டு உதவியாளர் ஒருவர் எனது அறைக்குள் ஓடி வந்து, இளைய மகன் ஜெஹ்வின் அறைக்குள் ஒரு நபர் நுழைந்து பணம் கேட்பதாகக் கூறினார்.

இதைக் கேட்ட நான் அந்த அறையை நோக்கி ஓடினேன். அங்கு சென்றபோது, அந்த நபர் முகமூடி அணிந்து இரண்டு கைகளிலும் ஹெக்ஸா பிளேடைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார். அப்போது யோசிக்காமல் அவரைத் தாக்கி, அவரைப் பிடித்தேன். இதற்குப் பிறகு, இருவருக்கும் இடையே ஒரு கைகலப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவர் எனது முதுகில் பலமுறை தாக்கினார். இது மட்டுமல்லாமல், அவர் எனது கழுத்தில் கத்தியால் ஆழமான காயங்களையும் ஏற்படுத்தினார். அப்போது திருடனின் இரண்டு கைகளிலும் கத்தி இருந்தது. நான் நிராயுதபாணியாக இருந்தேன்.
இதையும் படிங்க: சைஃப் அலிகான் கத்திக்குத்து வழக்கு : வேலை பறி போய், கைவிட்டுப்போன வருங்கால மனைவி… தவறாக கைதானவரின் அவல நிலை..!
விஷயம் கைமீறிப் போகத் தொடங்கியபோது, எனது வீட்டு உதவியாளர் கீதா என்னைத் தாக்கிக் கொண்டு இருந்த திருடனை பின்னால் இருந்து தாக்கி என்னை விலக்கி விட்டார். இந்த நேரத்தில், கீதாவும் நானும் அறையை விட்டு வெளியே வந்தோம். ஆனால் அந்த நபர் அறைக்குள் இருந்தார். இருவரும் அறையை வெளியில் இருந்து பூட்டினோம். அவன் அறைக்குள் சிக்கிக் கொண்டதாக நினைத்தோம். ஆனால் அவன் வந்த குழாய் வழியாக திரும்பி ஓடிவிட்டான். இருவருக்கும் இடையே நடந்த சண்டையின் போது, கரீனா ஜெவை அங்கிருந்து அழைத்துக்கொண்டு தைமூரின் அறைக்குச் சென்றாள்.

அவன் தப்பிச் சென்றது கரீனாவுக்குத் தெரிந்ததும், உடனடியாக என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டேன். ஏனென்றால் அந்த நேரத்தில் நான் இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்தேன். கரீனா வீட்டிற்கு வெளியே நின்று ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் டாக்ஸிகளை அழைத்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு என்னை ஒரு ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனது கழுத்தில் 30 ஆழமான காயங்கள் இருந்தது. இருப்பினும், அவர் 5 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சைஃப் அலி கான் மீது தாக்குதல்: 100 சதவீதம் பொருந்தாத குற்றம் சாட்டப்பட்ட ஷரிஃபுலின் கை ரேகைகள்..! உண்மை குற்றவாளி யார்..?