இன்று நடைபெற்ற தவெக முதலமாண்டு விழா நிகழ்ச்சி மாமல்லபுரம் அருகே ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்டில் நடைபெற்றது. 2500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் போதிய ஏற்பாடுகள் சரியாக செய்யப்படவில்லை எனவும் அவர்களுக்கு காலை உணவு மட்டுமல்ல மதிய உணவும் அரைகுறையாக பரிமாறப்பட்டதாக தொண்டர்கள் அதிருதி தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் 3000 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சி 10 மணிக்கு தொடங்கி இருந்தாலும் கூட காலையில் 5 மணியிலிருந்து நிர்வாகிகள் வரிசை கட்டி நிற்கத் தொடங்கி விட்டார்கள் 6:30 மணியிலிருந்து அவர்கள் நுழைவு வாயில் வழியாக பார்க்கிங் எல்லாம் சரி பார்க்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப் பட்டார்கள்.ஏறக்குறைய 7 மணி நேரத்திற்கு மேலாக கடும் பசியுடன் அவர்கள் காத்திருந்தார்கள். இவர்களுக்கு மதிய உணவு மட்டும்தான் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலை உணவு பொருத்தவரையில் சிறிய அளவிலான ஜூஸ் பாட்டில் ஒன்றும், ஐந்து பிஸ்கெட்டுகள் கொண்ட ஒரு சிறிய பாக்கெட் ஒன்றும் அவரவர் இருக்கைகளில் வைக்கப்பட்டு இருந்தது.

இதைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் உணவு கொடுக்கப்படவில்லை. இட்லி, உப்புமா போன்ற எந்த காலை சிறுண்டி ஏதும் வழங்கப்படவில்லை. இளைஞர்கள் மட்டும் இல்லாமல் வயதானவர்கள் கூட வந்திருக்கிறார்கள். பெண்கள் கலந்து கொண்டார்கள். சில பெண்கள் கைக்குழந்தையுடன் வந்து பங்கேற்றனர். அவர்களுக்கு எந்தவிதமான காலை உணவும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
இதையும் படிங்க: 'திஸ் இஸ் ராங் ஸ்பீச் ப்ரோ...' விஜய் பாணியிலேயே பதிலடி கொடுத்த அண்ணாமலை..!
இளைஞர்கள் விஜயை பார்க்க போகிறோம் என்ற ஆர்வத்தில் இருந்தாலும் கூட, சிறியவர்கள், 40 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தலைச் சுற்றல், மயக்க நிலையிலும் சோர்வாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். காலையிலே அரங்குக்கு வந்து விட்டதால் அவர்களுக்கு சாப்பாடு எதுவும் கிடைக்கவில்லை. விழா நடக்கும் இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வெளியில் சென்றால் மட்டும் தான் உணவு கிடைக்கும். ஒரு கிலோமீட்டர் தூரம் வெளியே சென்று விட்டால் மீண்டும் உள்ளே விடுவது சந்தேகம். ஏற்கனவே உள்ளே இருப்பவர்களுக்கே இடம் கிடையாது. இந்த இடத்தை விட்டு விட்டால் இடமும் கிடைக்காது என்பதால் நிகழ்ச்சி முடிந்த பிறகு சாப்பிட்டுக் கொள்ளலாம் என வயிற்றுப்பசியை பொறுத்துக் கொண்டார்கள்.

மதியம் நல்ல சாப்பாடு கிடைக்கும் ஒரு இலைக்கு 3000ம் செலவு செய்திருக்கிறார்கள் என நம்பிக்கொண்டு இருந்தார்கள் நிர்வாகிகள். 'காரட் அல்வா, மசால்வடை, காலிஃபிளவர், பூரி, உருளைக்கிழங்கு, பட்டாணி குருமா, வெஜ் பிரியாணி, தயிர்பச்சடி, சாதம், கதம்ப சாம்பார், அப்பளம், பீன்ஸ் பருப்பு, உசிலி , பூசணிக்காய், சௌசௌ, காரட், பின்ஸ் கூட்டு, ரசம், மோர், சால்ட், ஐஸ்கிரீம், ஊறுகாய், வாட்டர் பாட்டில், அடை பிரதமம் என 21 வகையான உணவு பதார்த்தங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் இதற்காக ஒரு இலைக்கு ரூ.3000 ரூபாய் செலவு செய்துள்ளார்கள் என்கிற தகவலும் அவர்களுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
விழா முடிந்ததும் பந்திக்கு பசியில் பறந்தோடினார்கள். அங்கே போனால் உட்கார்ந்து சாப்பிடக்கூட அவர்களுக்கு இருக்கைகள் போடப்படவில்லை. சரி, பசிக்கு உட்கார்ந்து சாப்பிட்டால் என்ன? நின்று சாப்பிட்டால் என்ன? என தங்களை சமாதானப்படுத்திக் கொண்டு காத்திருந்தால் இலையில் காத்திருந்தது அந்த ஏமாற்றம். 21 வகை பதார்த்தங்கள் வரும் என நம்பிக்காத்திருந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. இலையில் தொட்டுக்கோ, நக்கிக்கோ என சில பதார்த்தங்களே இருந்தன.

ஒரு சிறிய கூல்டிரிங்ஸ் பாட்டில். உளுந்த டை, மெதுவடை, கொஞ்சம் ஊறுகாய், ஒரே ஒரு பூரி, கொஞ்சம் மூந்தாள் கூட்டு, கொஞ்சம் தயிர் வெங்காயம், ஒரு வகை காய்கறி அவ்வளவுதான். வாட் இஸ் திஸ் ப்ரோ..? என ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து மைண்ட் வாய்ஸில் பேசிக் கொண்டு அதை மட்டுமே சாப்பிட்டுவிட்டு அரைகுறை வயிற்றுடன் அதிருப்தியிலும், பசி ,மயக்கத்திலும் வெளியேறினார்கள் தவெக தொண்டர்கள். 21 உணவு வகைகள் என்றார்களே என்னாச்சு என விசாரித்தால், இங்கு தொண்டர்களுக்கு தனியாக உணவு சமைக்கவில்லை. இந்த ஹோட்டல் நிர்வாகம் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.
இந்த இடத்திற்கு தனியாக வாடகை கிடையாது. சாப்பாட்டுக்கு மட்டும்தான் கட்டணம். ஆகையால், ஒரு உணவுத் தட்டிற்கு 3000 ரூபாய் என்று 2200 பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில், 66 லட்சத்தற்கு மேல் செலவு செய்யும் செய்யப்பட்டுள்ளது'' என விளக்கம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள் விழா ஏற்பாட்டாளர்கள். அப்போ 21 வகை உணவுகள் பரிமாறப்படும் என பரப்பி விட்டது யார் ப்ரோ..?
இதையும் படிங்க: தாடி பாலாஜிக்கு அனுமதி மறுப்பு..! நெஞ்சில் பச்சை குத்தியதற்கு இதுதானா பரிசு..!