ஒன்றாக திரைப்படங்களில் நடிக்கும் பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது, மலையேறி போய் சமீப காலமாக சீரியல் நடிகர்கள் தான் அதிகம் ஒன்றாக நடிப்பவரையே காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அந்த வகையில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான KKK (கனாக்காணும் காலங்கள்) தொடரில் ஒன்றாக இனைந்து நடித்ததன் மூலம் இப்போது ஒரு ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: நியூ இயர் ஸ்பெஷல்; ஜொலிக்கும் சேலையில் திக்குமுக்காட வைத்த ஐஸ்வர்யா மேனன்!
ஏற்கனவே கானா காணும் காலங்கள் தீபிகா ராஜா மற்றும் வெற்றி பிரபு ஆகியோர் காதலித்து திருணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் 2023-ஆம் ஆண்டு நடந்த நிலையில், இருவருமே தொடர்ந்து நடித்து வருகிறார்கள். குறிப்பாக தீபிகா, ஹாட் ஸ்டாரின் முடிவடைய உள்ள 'உப்பு புலி காரம்' தொடரில் நடித்திருந்தார்.

இவர்களை தொடர்ந்து கனகாணும் காலங்கள் சீசன் 2 வெப் தொடரில் நடித்த மற்றொரு ஜோடி தங்களின் காதலை அறிவித்துள்ளனர்.

அவர்கள் வேறு யாரும் அல்ல விஜய் விஜே சங்கீதா மற்றும் பிளாக் ஷீப் அரவிந்த் சேஜு ஆகியோர் தான்.

விஜே சங்கீதா, சன் டிவியில் ஒளிபரப்பான 'அழகி' சீரியல் மூலம் அறிமுகமாகி, பின்னர் அன்பே வா, போன்ற தொடர்களில் நடித்திருந்தார்.

அதே போல் விஜய் டிவியில் தீபக் - நக்ஷத்ரா நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த, விஜய் டிவி தொடரான 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் வசுந்தரா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

விஜே சங்கீதா திருமணம் செய்து கொள்ள உள்ள அரவிந்த் சேஜு, பல பிளாக் ஷீப் தொடர்களில் நடித்துள்ளார்.

கனானானும் காலங்கள் தொடரில் இவர் ஸ்டுடென்ட்டாக நடந்த நிலையில், சங்கீதா மலர் டீச்சர் என்கிற ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள, 'அய்யனார் துணை' என்கிற தொடரிலும் அரவிந்த் சேஜு நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

தற்போது இருவரும், தங்களின் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு... காதலிக்கும் விஷயத்தை அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் இப்போதே திருமணத்திற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களை கூற துவங்கி விட்டனர்.
இதையும் படிங்க: 2024 ஸ்கோர் செய்தது யார்? விஜய்? ரஜினி? விஜய் சேதுபதி? சிவகார்த்திகேயன்?