நடிகை ஐஸ்வர்யா மேனனின் பூர்வீகம் கேரளா என்றாலும், இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஈரோட்டில் தான்.

ஈரோட்டில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் தன்னுடைய படிப்பை முடித்த ஐஸ்வர்யா மேனன், நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் திரைப்பட வாய்ப்புகளை தேட துவங்கினார்.

இதையும் படிங்க: 35 வயதிலும் முரட்டு அழகு; பிரியா பவானி ஷங்கரின் கூல் போட்டோஸ்!
அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு சித்தார்த் - அமலா பால் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் அமலா பாலின் தோழிகளில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதைத்தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, போன்ற திரைப்படங்களில் நடித்த இவருக்கு கன்னடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா மேனன், தமிழை தாண்டி தற்போது மலையாளம், தெலுங்கு, போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன், அடிக்கடி கலக்கலான புகைப்படங்களை எடுத்து அதை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் இந்த ஆண்டு புத்தாண்டை சிறப்பிக்கும் விதமாக, ஜொலிக்கும் சேலையில் சேலையில் போஸ் கொடுத்து திக்கு முக்காட வைத்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்.

தமிழில், இதுவரை சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் ஐஸ்வர்யா மேனனுக்கு வருடமாவது வாய்ப்புகள் கொடுத்து தமிழ் சினிமா அரவணைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: 20 வயசுலயே இப்படியா? கவர்ச்சியில் கிரணுக்கே டஃப் கொடுக்க ஆரம்பித்த அனிகா சுரேந்திரன்!