இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி கோவிலில் சிவராத்திரி பங்ஷனில் பாட வைக்க திட்டமிட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது கனி அழகாக பாடி முடிக்க எல்லாரும் கைதட்டி உற்சாகப்படுத்துகின்றனர். இதனையடுத்து வைகுண்டம் மற்றும் சண்முகத்தின் தங்கைகள் கனி இவ்வளவு அழகாக பாடுவானு எங்களுக்கு தெரியாமல் போய்டுச்சு என்று சந்தோசப்படுகின்றனர்.
அடுத்து பரணிக்கு போன் செய்யும் இசக்கி அவருக்கு கையில் அடிபட்டு இருக்கு நாங்க வரல.. நீங்க பொறுமையாக காலையில் வாங்க என்று சொல்லி போனை வைக்க முத்துபாண்டிக்கு அடிபட்டு இருக்கும் விஷயம் அறிந்ததும் ஷண்முகம் நான் போய் கூட்டிட்டு வரேன் என்று கிளம்புகிறான்.
இதையும் படிங்க: மதுரையை நோக்கி நடக்கும் சேஸிங்.. குழந்தையின் உயிரை காப்பாற்றுவார்களா? பரணி - ஷண்முகம்! அண்ணா சீரியல் அப்டேட்!

பரணி அதெல்லாம் போக வேண்டாம், என தடுத்து நிறுத்துகிறாள். இங்கே இசக்கி மற்றும் முத்துபாண்டிக்கும் இடையே முதலிரவு நடந்து முடிகிறது, அடுத்த நாள் காலையில் இசக்கி கோலம் போட்டு கொண்டிருக்க முத்துப்பாண்டி அவளிடம் ரொமான்ஸ் செய்கிறான்.
இந்த சமயத்தில் எல்லாரும் வீட்டிற்கு வந்து விடுகின்றனர், முத்துப்பாண்டி கையில் கட்டு இல்லாமல் இருக்க எங்க அடிபட்டு இருக்குனு சொன்னாங்க என்று கலாய்க்கின்றனர். இதையடுத்து சௌந்திரபாண்டி பரணியை அமெரிக்காவிற்கு அனுப்பி விட்டு இந்த குடும்பத்தை பிரிக்கணும் என்று கனவு காண்கிறார்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
இதையும் படிங்க: Anna Serial: சௌந்தரபாண்டியை கடுப்பாக்கிய சிவபாலன்; நியூ என்ட்ரி கொடுக்கும் 3 பிரபலங்கள் - அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்!