ஏ. ஆர்.ரகுமானின் முதல் சீடன் என்று அழைக்கப்படும் ஜி.வி.பிரகாஷ், 2006ல், எஸ்.சங்கர் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான 'வெயில்' திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.அதில் வரும் "வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி" என்ற பாடல் இன்று வரை ஃபேமஸ். அதனை தொடர்ந்து கிரீடம்,பொல்லாதவன், நான் அவள் அது, சேவல், அங்காடி தெரு, ஆயிரத்தில் ஓருவன், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், மதராசபட்டினம், ஆடுகளம், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன, முப்பொழுதும் உன் கற்பனைகள், ஓரம் போ, எவனோ ஒருவன், காளை, குசேலன், சகுனி, தாண்டவம், ஏன் என்றால் காதல் என்பேன், பென்சில், அசுரன், சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.

அதுமட்டுமல்லாமல், இதுவரை 24 படங்களில் நடித்துள்ள ஜி.வி.பிரகாஷ், ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை வெளிக்காட்டி இருப்பார். இவர் நடித்த டார்லிங் திரைப்படம் பேய் படமாக இருந்தாலும், அதில் இவரது நடிப்பை அற்புதமாக வெளிக்காட்டி இருப்பார். மேலும் சித்தார்த்துடன் "சிவப்பு ,மஞ்சள் பச்சை" திரைப்படத்தில் அக்காவுக்கு பிடித்த தம்பியாகவும், மாமாவுக்கு வில்லனாகவும் நடித்து இன்றுவரை அனைவரது செல்ல பிள்ளையாக இருக்கிறார். மேலும், 2013ம் ஆண்டு "ஜி. வி. பிரகாஷ் குமார் புரொடக்சன்ஸ்" என்ற பெயரில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி "மத யானைக் கூட்டம்" படத்தை தயாரித்தார்.
இதையும் படிங்க: ஆதி நிக்கி கல்ராணி விவாகரத்து.. ஆதி படம் வெளியாக உள்ள நிலையில் அதிர்ச்சி..!

இப்படி இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகரும், நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமாக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ், இதுவரை 24படங்கள் நடித்துள்ள நிலையில் அவரது 25-வது படமாக ஜிவி25 என்ற தலைப்பில் 'கிங்ஸ்டன்' திரைப்படம் உருவாகியுள்ளது. யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், நடிகை திவ்யபாரதி,
சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலருடன் ஜிவி பிரகாஷும் இணைந்து நடித்துள்ள இந்தியாவின் முதல் கடல் சார்ந்த பேய் படம் தான் 'கிங்ஸ்டன்'. இப்படம் வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்திற்கான ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

ட்ரெய்லர் வெளியாவதற்கு முன் 'கிங்ஸ்டன்' படத்தின் ஸ்பெஷல் கதாபாத்திரமான கடல் பேயை படக்குழு அறிமுகம் செய்து உள்ளனர்.

இதைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்த படம் வெற்றி படமாகவும் பயங்கரமான பேய் படமாகவும் இருக்கும் என கூறி உள்ளனர்.
இதையும் படிங்க: அகத்தியா மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவாரா ஜீவா..?