இந்திரஜா சங்கர், நடிகர் ரோபோ சங்கரின் மகள் என்பது மட்டுமல்லாமல் தனது உழைப்பால் உயர்ந்தவர் என்றும் சொல்லலாம்.இவர் விருகம் மற்றும் அட்லியின் பிகில் திரைப்படத்தில் நடித்திருப்பார். அதில் காமெடி நடிகர் விவேக் "பாண்டியம்மா வெறியான படுத்திடும் ஹரியானா" என இவரைக் குறித்து டயலாக் கூற, அதற்கு ஏற்றார்போல் ஒரே அடியில் ரெஃப்ரியை, ஏரில் பறக்க வைத்திருப்பார் இந்திரஜா.

இப்படியிருக்க, இப்படத்தின் காட்சியில் இவரை நடிகர் விஜய் "குண்டம்மா" என்று கூறியதாக பல மகளிர் சங்கங்கள் முதல் அநேக தரப்பினர் விஜயை குறை சொல்லி மன்னிப்பு கேட்கும் படி கண்டன கோஷங்களை கொட்டி தீர்த்தனர். ஆனால் அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திரஜா சங்கர், அக்காட்சி நடித்து முடித்த உடனே, நடிகர் விஜய் பலமுறை தன்னிடம் 'மன்னிப்பு' கேட்டதாக கூறி அனைவரது வாயையும் அடைத்தார்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் பாடகர் கே.ஜே.யேசுதாஸ்... பயமுறுத்தும் மருத்துவர்கள்..!

இந்த நிலையில் திடீரென நடிகர் ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவி இருவரும் தங்களது உடல் எடைகளை குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தனர். அது மட்டுமல்லாது வாழ்க்கையில் இனி யாரும் குடிக்காதீர்கள் தவறான பழக்கங்கள் எதுவும் வேண்டாம், அது உங்கள் உடம்பையும் வாழ்க்கையும் கெடுத்து விடும் என்று அனைவருக்கும் அறிவுரையும் கூறி வருகின்றனர்.

இந்த சூழலில், திருமணம் ஆன பொழுது நெட்டிசன்கள் பல தவறான கருத்துக்களையும் மனதை நோகடிக்கும் வகையிலும் பேசி வந்த நிலையில், அந்த நெகட்டிவிட்டி கமெண்ட்ஸ்கள் அனைத்தையும் பாசிட்டிவ் ஆக்கினார் இந்திரஜா சங்கர். இதனை தொடர்ந்து தற்போது அவர் ஆண் குழந்தையும் பெற்றெடுத்திருக்கிறார். இதனைப் பார்த்த அனேக ரசிகர்கள் அவருக்கும் பெற்றெடுத்த ஆண் குழந்தைக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு, பல பிரபலங்களும், மக்களும் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். அதுமட்டுமல்லாமல் கும்பமேளாவிலும் நவராத்திரி ஆன நேற்று மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிவராத்திரி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் தான். அந்த வகையில் மகா சிவராத்திரியை, பல அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் ஈஷா யோகா மையத்தில் பக்தி பரவசத்துடன் ஈடுபட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து ஆதியோகி சிலைக்கு முன்பாக இந்திரஜா சங்கர், பாகுபலி படத்தில் வரும் ஒளிர்விடும் எம் நேசனே... குளிர்மலை தன் வாசனே.. என்ற பாடலுக்கு ஏற்றார் போல் ஆதியோகி சிலைக்கு முன்பாக பரதநாட்டியம் ஆடுவதைப் போல தனது ஒரு காலை தூக்கிக் கொண்டு போஸ் கொடுத்து இருக்கிறார்.

இந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பகுதியில் பதிவிட்டுள்ள இந்திரா சங்கர், தான் மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் போஸ்டர் போட்டு இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: கூலி படத்தில் "பூஜா ஹெக்டே".. அடுத்த அப்டேட் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!