யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தன்னைப் பற்றி அவதூறு கருத்தை தெரிவித்ததாகக் கூறி, 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி, நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், அவதூறு கருத்துக்களை தெரிவிக்க சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கில், சிங்கமுத்து தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், அவதூறாக தெரிவித்த வார்த்தை எது என்பதை வடிவேலு தனது மனுவில் குறிப்பிடவில்லை எனவும், திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் கருத்துக்களையும் மட்டுமே பேட்டியில் தெரிவித்ததாக கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ரியல் நண்பேன்டா..! சந்தானத்தை ஹீரோவாக்கி படம் தயாரிக்கும் ஆர்யா.. முதல் பாடலுக்கு டீசர் வெளியிட்டு அதகளம்..!!

மேலும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கு நிலுவையில் இருக்கும் வரை வடிவேலுவுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்கப் போவதில்லை என உத்தரவாத மனுவை சிங்கமுத்து தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், வடிவேலுவின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கு, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி, வாக்குமூலம் அளிப்பதற்காக நடிகர் வடிவேலு, மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தார்.
அவரிடம் வாக்குமூலம் பதிவு துவங்கியதும், சிங்கமுத்து சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வடிவேலிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் வாக்குமூலத்தை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதை பதிவு செய்துகொண்ட மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர், வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைப்பதாகவும், அதில் உயர்நீதிமன்றம் முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.
வைகைப்புயல் வடிவேலு நடித்த பல படங்களில் அவருக்கு என்று ஒருசில நடிகர்கள் குழுவாக நடிப்பார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் தான் இன்றளவும் வடிவேலு காமெடியாக நம்மால் ரசிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் வடிவேலுவுக்கும் அதேகுழுவைச் சேர்ந்த சிங்கமுத்துவுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. நம்மை சிரிக்க வைக்கும் இவர்கள் இவ்வளவு சீரியஸாக சண்டை போட்டு வருவது வியப்பைத் தருகிறது. இந்த விவகாரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே திரையுலகினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை பின்னுக்கு தள்ளும் ரவி மோகன்... கை வசம் இருக்கும் நிறைய படங்கள்..!