பள்ளி தேர்வுகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. அதனால், வெக்கேஷனை எப்படி ஜாலியாக கழிக்கலாம்..? எங்கு போகலாம்..? என குட்டீஸ்கள் ஒரு பக்கம் குஷியாக ப்ளான் போட்டுக் கொண்டிருக்க, மறுபக்கம் அந்த குட்டீஸ்களை எப்படி தங்கள் பக்கம் இழுத்துப் போட்டு டிவி முன்பு அவர்களை அமர வைக்கலாம் என பிரபல தொலைக்காட்சியும் மாஸ்டர் மைண்டுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதற்காகவே தங்கள் டீமுடன் கலந்து பேசி, ஏழாவது அறிவை கசக்கிப் பிழிந்து ஒரு புதிய ரியாலிட்டி ஷோவை முடிவு செய்து, அந்த ஷோவுக்கான பெயரையும் தேர்ந்தெடுத்துள்ளது.

குழந்தைகளை ஈஸியாகக் கவர் பண்ணுவதுதான் அந்த ஷோவின் நோக்கமே. அதற்கு ஏற்றாற்போல 'நானும் ரௌடிதான்' என பெயரையும் கேட்சியாக வைத்துள்ளனர். அதுவும் ப்ரோமோவில் யார் அந்த அக்கா? என்ற கேள்விதான் ஹைலைட்டே. அக்க்க்க்கா.. என அடிவயிற்றில் இருந்து குட்டீஸ்கள் கத்துவதுதான் ப்ரோமோவின் ஓப்பனிங் ஹிட்ஸ். ''பிஸ்கெட்டும் இல்லை, ரெஸ்பெக்ட்டும் இல்லை... தலைவி நீங்கள் இதைக் கேட்கவில்லை என்றால், நாங்கள் நாட்டை விட்டுப் போவதைத் தவிர, எங்களுக்கு வேற வழியேயில்லை'' என்று சில குட்டீஸ்கள் வருத்தமாக செல்லும்போது ஒரே ஒரு சுட்டிக் குட்டி பையன் ''இந்த அநியாயத்தைத் தட்டி கேட்பதற்கு ஒருத்தி வருவார்'' என்கிற மாதிரி, ''இருங்க பாஸ்'' என ஆறுதலாக, க்யூட்டாக சொல்வான்
இதையும் படிங்க: உடம்புல துணி இல்லாம காட்டவா.. பட வாய்ப்பு கொடுத்துடுவீங்களா..? கடுப்பில் சிவாங்கி..!

அடுத்து மைல்ட் வெளிச்சத்தில் ஒரு பெண்ணுடைய வாயும், கண்ணும் மட்டும் தெரியும். அந்தப் பெண் யார்..? இல்லை, யார் அந்த அக்கா? கெஸ் பண்ணுங்க என்று ப்ரோமோவில் ட்விஸ்ட் வைத்துள்ளனர். ஆனால், அந்த அக்கா விஜய் டிவி புகழ் ஷிவாங்கிதான். வேற யாரு? என சமூக வலைதளங்களில் கமெண்ட்கள் நிறைந்து வழிகின்றன. காரணம், ஷிவாங்கியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஷிவாங்கி நிழலைப் பார்த்தாலே அது அவங்க தான் என அடித்துச் சொல்கிற அளவுக்கு தீவிர ரசிகர்கள் உண்டு.
அவரது கண்ணிலும், வாயிலும் ஃப்ளாஷ் அடித்தால் கண்டுபிடிக்க மாட்டார்களா என்ன? பாடல் பாடும் போது கண்களை மூடி தன்னை மறந்து, அனைவரையும் ரசிக்க வைக்கும் ஷிவாங்கி தனது எதார்த்தமான பேச்சின் மூலம் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைப்பதிலும் கெட்டிக்காரி தான். அதேபோலத்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் ஷிவாங்கிக்கு என தனி ரசிகர் பட்டாளம் உண்டு. மொத்தத்தில் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை லிஸ்டில் ஷிவாங்கிக்கு ஒரு இடம் உண்டு.

இப்படி விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக சுற்றி வந்த ஷிவாங்கி வேறு ஒரு போட்டிச் சேனலுக்கு ஷோ தொகுப்பாளினியாகச் செல்வதுதான் சின்னத்திரை மத்தியில் பரபர ஹாட் டாபிக்கே. அண்மையில் ஆங்கர் பிரியங்கா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மணிமேகலை, விஜய் டிவியில் இருந்து விலகி, ஜீ தமிழுக்கு சென்று விட்டார். அந்த நேரம் சமூக வலைதளங்களில் பெரும் பஞ்சாயத்தே நடந்தது.
மணிமேகலைக்கு ஏகப்பட்ட சப்போர்ட், கமெண்டுகளைக்கூட காண முடிந்தது. பிரியங்காவுக்கோ அவருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே ஆதரவு குரல் கொடுத்தனர். இதற்கு மத்தியில் இப்போது ஷிவாங்கியும், நானும் ரவுடிதான் ஷோவுக்காக பிரபல தொலைக்காட்சிக்கு சென்றது, யார் அந்த அக்கா என்ற கேள்வியால் உறுதியாகிவிட்டது. இப்படி ஒவ்வொரு செல்லப்பிள்ளைகளையும் அடுத்தடுத்து தாரை வார்த்துக் கொண்டு இருந்தால் நம்ம கடையை எப்படி நடத்துவது? எப்படி வியாபாரம் செய்வது? விஜய் டிவிக்கு என்னதான் ஆச்சு? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதே நேரம் விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சிவகார்த்திகேயன் ஹீரோவாக அவதாரம் எடுக்கவில்லையா? இன்னும் விஜய் டிவி பிரபலங்கள் பலர் வேறு சேனலுக்கு செல்லவில்லையா? அதேபோன்றுதான் ஷிவாங்கிக்கும் அடுத்த கட்ட வளர்ச்சி வேண்டும் தானே... அதனால், புதிய ஷோ ஒன்றை தொகுத்து வழங்குவதில் எந்த தவறும் இல்லை. பாடகி, நடிகை, காமெடி குயின் என தனது அவதாரத்தில் இதுவும் ஒன்றாக இருக்கட்டுமே என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: லேடி சூப்பர் ஸ்டாருன்னு என்னை கூப்பிட வேண்டாம்..! நயன்தாராவை தொடர்ந்து மற்றொரு நடிகை கோரிக்கை..!