ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் இதுவரை வெற்றி படங்களாகவே அமைந்துள்ளது. சினிமா உலகில் இவரை பார்த்த பலருக்கும் கிராமத்து பெண் போலவே தோற்றம் அளித்தார், ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஹாலிவுட் ஹீரோயின் போல் மாறி இருக்கிறார். அந்த அளவிற்கு இவரது நடிப்பும் தோற்றமும் அவருடன் வளர்ந்து வருகிறது.

இவர், சினிமா பயணத்தை ஆரமிக்க முடிவு செய்த பொழுது வெள்ளித்திரைக்கு செல்ல நினைத்தார் ஆனால் முடியாமல் போக, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "அசத்தப்போவது யாரு" என்ற பிரபல நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ஆரம்பித்தார். அதன் பின் மற்றொரு தொலைக்காட்சியில் "மானாட மயிலாட" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதனால் தான் இப்பொழுது வரை ஐஸ்வர்யா ராஜேஷ் நடனத்தில் அசத்தி வருகிறார்.
இதையும் படிங்க: ‘என் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளிகூட இல்லை, ஆனால்…’ நடிகைக்காக கலங்கிய டிஜிபி..!

இப்படி தொலைக்காட்சிகளில் இவரது திறமையை பார்த்த இயக்குநர்கள் இவரை படத்தில் நடிக்க அழைத்தனர்,அதில் 2010ம் ஆண்டு 'நீதானா அவன்" என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனை தனக்கு சாதகமாய் பயன்படுத்திய ஐஸ்வர்யா, அப்படத்தில் நடித்ததில் தமிழ் திரையுலகில் தனது பெயரை நிலைநாட்டினார்.

இதனை தொடர்ந்து, அட்டகத்தி, புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும். கதை திரைக்கதை வசனம் இயக்கம்,திருடன் போலீஸ்,காக்கா முட்டைஹலோ நான் பேய் பேசுறேன். ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், சாமி 2, வட சென்னை, கனா நம்ம வீட்டுப் பிள்ளை, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இன்று பிரபல நடிகையாக மாறி இருக்கிறார். இவரது, காக்கா முட்டை படத்திற்காக "சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருதும்' சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதும் பெற்றவர்.
இப்படிப்பட்ட, ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது தனது இன்ஸ்ட்டா, பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம், அதனை தொடர்ந்து தற்பொழுது தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மதிமயங்க செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: அந்த மாதிரியான காட்சியில் நான் நடிக்க காரணம் கமல் தான்..! நடிகை திவ்யபாரதி ஓபன் டாக்..!