நடிகை நயன்தாராவுக்கும் நடிகர் தனுஷுக்கும் என்ன தான் ஆனது என்று சொல்லும் அளவிற்கு இருவரும் தற்பொழுது நீதிமன்றம் வாயிலாகவும் அறிக்கையின் வாயிலாகவும் சண்டையிட்டு வருகின்றனர். இப்போது இப்படி மாறி...மாறி...சண்டையிட்டு கொள்கிறவர்கள் ஒருகாலத்தில் இப்படி இல்லையே என நெட்டிசன்கள் புலம்பும் அளவிற்கு இந்த காபி ரைட்ஸ் விஷயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் 'யாரடி நீ மோகினி' படத்தில் நயன்தாராவும் தனுஷும் கேரக்ட்டராக வாழ்ந்தனர். மேலும் தனுஷின் த்ரீ படத்தில் அவருடன் சிறப்பு நடனமும் ஆடி இருப்பார் நயன்தாரா.

இப்படி எல்லாம் நன்றாக போய் கொண்டிருக்க, நயன்தாராவின் திருமணத்தால் தனுஷ் பாதிக்கப்பட்டாரா அல்லது அவரது படத்தின் பாடல்களையும் காட்சிகளையும் காண்பித்ததால் கோபப்பட்டாரா என புரியாமல் இன்றும் ரசிகர்கள் தலையை பிய்த்து கொண்டு செல்கின்றனர். அந்த அளவிற்கு இந்த கேஸின் தாக்கம் மக்களிடத்தில் உள்ளது. ஒருபுறம் தனுஷும் விட்டு கொடுப்பதாக இல்லை, மறுபுறம் நயன்தாராவும் விட்டு கொடுப்பதாக இல்லை என்று தெளிவாக தெரிகிறது.
இதையும் படிங்க: நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய ஹீரோயின்கள்... சம்பளத்தை உயர்த்தியதால் வேதனையில் தயாரிப்பாளர்கள்..!
இப்படி இருக்க, இந்த பிரச்சனை ஆரம்பித்த இடம் எங்கு என்று பார்த்தால், விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியின் திருமண ஆவணப்படத்தில் தான். இவர்களது திருமண வீடியோவை நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. நிறுவனம் "பியாண்ட் தி ஃபேரி டேல்"(Nayanthara: Beyond The Fairy Tale) என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தின் ட்ரைலர் வெளியானபோதே, அதில் "நானும் ரவுடி தான்" படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், திடீரென ரூ.10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸை நயன்தாரா வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

இதனால், ஹனிமூன் வைப்பிலும் கோபத்தின் உச்சிக்கே சென்ற நயன்தாரா, அறிக்கை வாயிலாக நடிகர் தனுஷை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அது பத்தாது என அவரது கணவர் விக்னேஷ் சிவன், அந்த மூன்று நிமிட படப்பிடிப்பு வீடியோவை இலவசமாகப் கண்டு ரசியுங்கள் என தனது இஸ்டாகிராமில் ஸ்டோரி வைக்க பிரச்சனை பூதாகரமானது. ஆரம்பத்தில் தொழில் ரீதியாக இருந்த கருத்து வேறுபாடு, இந்த பதிவுக்கு பின் 'ஈகோவாக' மாறி, தற்பொழுது இரு தரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைந்து வருகின்றனர். இவர்கள் இருவரின் ஈகோ சண்டையில் தற்பொழுது இலவச இணைப்பாக சிக்கி இருக்கிறது நெட்பிளிக்ஸ் நிறுவனம்.

தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என நயன்தாரா தரப்பும், நெட்பிளிக்ஸ் தரப்பும் தொடர்ந்து போராடி வர, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனுஷ் தரப்பு கேள்விகளுக்கும் அவர்கள் தாக்கல் செய்த மனுவிற்கும் பதிலளிக்க நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கும் நயன்தாரா தரப்பிற்கும் உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் தனுஷின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என நெட்பிளிக்ஸ் தரப்பு அழுத்தம் கொடுக்க, அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் 10 ரூபாய் காபி குடிச்சிகிட்டே முடிக்க வேண்டிய விஷயத்தை ஏன் இப்படி இழுத்து வருகிறார்கள் என தெரியவில்லை என்று பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மூக்குத்தி அம்மன்-2 படத்தை இயக்காததற்கு காரணம் இதுதான்..! ஆர்.ஜே.பாலாஜி கூறிய பதிலுக்கு கிடைத்த வெகுமானம்..!