சத்யா மூவிஸ் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், 1995-ல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 'பாட்ஷா'.
இந்த திரைப்படம் திரைக்கு வந்து சுமார் 30 ஆண்டுகள் ஆகிறது. அதே போல் 1 வருடம் திரையரங்கில் ஓடி வசூல் சாதனை செய்த இந்த படத்தை, சத்யா மூவீஸின் 60 வது பொன்விழாவையும் கொண்டாடும் வகையில், அதிநவீன 4k தொழில்நுட்பத்தில் மேம்படுத்தி, டால்பி அட்மாஸ் ஒலியுடன் மீண்டும் திரையில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படம் தமிழில் மட்டும் இன்றி இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் ரீ-மேக் செய்யப்பட்டு வெற்றி கண்டது.

இந்த படத்தில் ரஜினிகாந்த், பொறுப்புள்ள மகனாகவும், கேங் ஸ்டாராகவும் தன்னுடைய நடிப்பில் இரண்டு வேரியேஷனை வெளிப்படுத்தி இருந்தார். ரஜினிகாந்துக்கு ஜோடியாக, நக்மா நடிக்க.. வில்லனாக ரகுவரன், சரண்ராஜ், ஆனந்த்ராஜ், ஜனகராஜ், விஜயகுமார், யுவராணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: 2024 ஸ்கோர் செய்தது யார்? விஜய்? ரஜினி? விஜய் சேதுபதி? சிவகார்த்திகேயன்?
எத்தனை முறை தொலைக்காட்சியில் போட்டாலும் ஒவ்வொரு முறையில் TRP-யை எகிற செய்யும் இந்த படம், இந்த ஆண்டு முதல் ரீ-மேக் திரைப்படமாக வெளியான உள்ள நிலையில், கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என நம்ப படுகிறது. 'பாட்ஷா' ரீ-ரிலீஸை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள படக்குழு விரைவில் ரிலீஸ் தேதியும் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஜினி சொல்லும் கெட்டவன் யார்? புத்தாண்டில் பொடி வைத்து பேசிய ரஜினி...