லோகேஷ் கனகராஜன் இயக்கம் என்றால் அனைவரும் பார்த்து வியக்கக்கூடிய காட்சிகளை என்றுமே வைத்திருப்பார், என்னும் அளவிற்கு தனது இயக்கத்தை மக்கள் மனதில் கொண்டு சேர்த்தவர். இவர் என்றுமே மிகப்பெரிய பிரபலங்களை வைத்தே தனது படங்களை இயக்கி வருவார்.

அப்படிப்பட்ட லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் வைத்து "மாஸ்டர்" திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதில் நடிகர் விஜயின் கில்லி திரைப்படத்தின் பாடலை வைத்து கபடி போட்டியை வேறு விதமாக காண்பித்து, நடிகர் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியை வைத்து படத்தின் காட்சிகளை அசத்தியிருப்பார். அது மட்டுமல்லாது உலகநாயகன் கமலஹாசன் தனக்கு ஏற்ற ஒரு படத்தை யார் கொண்டு வருவார்கள் என்று காத்துக் கொண்டிருந்த பொழுது, லோகேஷ் கனகராஜ் தனது இயக்கத்தில் "விக்ரம்" படத்தை தயாரித்து, நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின் கமலஹாசனுக்கு தலை சிறந்த வெற்றிப் படத்தை கொடுத்தார். மேலும், இரவு காட்சிகளை மட்டுமே அடிப்படையாக வைத்து உருவாக்கிய "கைதி" திரைப்படத்தை மிகவும் மிரட்டலாக காண்பித்து இருப்பார். சமீபத்தில் நடிகர் விஜயை வைத்து இவர் இயக்கிய "லியோ" திரைப்படம் பல விமர்சனங்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றி படமாக ஓடியது. இவருடைய படங்கள் அனைத்தும் சீரிஸ்கள் போல் தனி பேட்டன் ஆகவே இருந்து வரும் நிலையில், இவர் தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார்.
இதையும் படிங்க: என்ன "ஜெயிலர்" சவுண்ட் "ஜப்பான்" வரைக்கும் இருக்கு..! ஜப்பானில் தடம் பதித்த ஜெயிலர்.....ரிலீஸ் எப்போ..?

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' திரைப்படத்தை நடிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார், இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சவுபின் ஷாகிர், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்ப படத்தின் படப்பிடிப்புக் காட்சிகளும், போஸ்டர்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், தற்பொழுது இப்படத்தின் படப்பிடிப்பானது ஹைதராபாத் மற்றும் பாங்காங் ஆகிய பகுதிகளில் நிறைவடைந்து உள்ளது. வருகின்ற மார்ச் மாதம் இறுதிக்குள் இப்படத்தின் மீதமுள்ள பாடப்பிடிப்பு காட்சிகள் முற்றிலுமாக நிறைவடையும் என்றும் வருகின்ற ஆகஸ்ட் 10ம் தேதி அல்லது தீபாவளி அன்று இப்படம் வெளியாகும் என்ற தகவல்கள் பரவி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் வரும் குத்துப்பாட்டிற்கு நடிகை "பூஜா ஹெக்டே" சிறப்பு நடனமாடி இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான "சன் பிக்சர்ஸ்" தனது எக்ஸ் தல பக்கத்தில் இன்று காலை 11 மணி அளவில் கூலி படத்திற்கான முக்கிய அப்டேட் வெளியாகும் என பதிவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், கூலி படத்திற்கான அடுத்த அப்டேட் போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்டு உள்ளது. அந்த போஸ்டரில் அனைவரும் நினைத்தை போல் "பூஜா ஹெக்டே" இருப்பதை உறுதிபடுத்தி இருக்கின்றனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் தற்பொழுது கொண்டாடி வருகின்றனர். மேலும் பாடலை விரைவில் வெளியிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ரஜினி பட தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை; அதிர்ச்சியில் திரையுலகம்!