நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யா ஏற்கனவே நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது திருமண வாழ்க்கையை பாதியில் முடித்து கொண்டனர். இதனை அடுத்து தனிமையை கழிக்க சமந்தா பல முயற்சிகளை எடுத்து ஈஷா யோகா மையம் உள்ளிட்ட பல இடங்களில் சுற்றி திரிந்து வருகிறார்.

இப்படியிருக்க, இருவரும் எப்பொழுது சேர்வார்கள் என மக்கள் காத்து கொண்டிருந்த சூழலில், நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார் என்ற செய்தி வெளியாகி அனைவரும் புறணி பேச, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு இவர்கள் இருவருக்குமான நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடந்து முடிந்து முடிந்தது. பின் அவர்களது திருமணம் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்தது.
இதையும் படிங்க: சமந்தா எடுத்த விபரீத முடிவு.. இல்லத்தரசிகளும் எடுத்தால் நன்றாக இருக்கும்... இணையவாசிகள் நாசுக்காக குமுறல்..!

இவர்களது திருமணம் ரூ.200 கோடி படஜெட்டில் நடைபெற்றது. முதலில் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக இருந்த திருமணம், ஒரு சில காரணங்களுக்காக ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில், நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு ஏகப்பட்ட சடங்குகளுடன் 8 மணி நேரம்வரை நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்தினர்.

இந்த சூழ்நிலையில், திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரும் ஒன்றாக வளம் வரும் போட்டோ மற்றும் வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வந்தனர். தற்போது சோபிதா துலிபாலா அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் நாக சைதன்யா டி ஜே வாசிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த அனைவரும் சைத்தன்யாவுக்கு டி.ஜே ப்லே செய்ய தெரிகிறது என்பதால் தினமும் வீட்டில் வைப் செய்து கொண்டு இருப்பார் என வாழ்த்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தாறுமாறா கிழிஞ்சி தொங்கும் ஸ்டைலிஷ் உடையில்... அழகில் சாய்த்த சமந்தாவின் ரீசென்ட் போட்டோஸ்!