சிவகார்த்திகேயனை தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சியின் கனா காணும் காலங்கள், கல்லூரி காலம் போன்ற தொடர்களில் நடித்து, பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி, மெல்ல மெல்ல நகர்ந்து சரவணன் மீனாட்சி தொடரின் கதாநாயகனாக மாறி, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் 2017-ம் ஆண்டு விக்ரம் பிரபு நடித்த "சத்ரியன்" திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றி, 2019-ம் ஆண்டு 'காதல் ஒன்று கண்டேன்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் ரியோ ராஜ்.

ரியோ ராஜ் தொகுப்பாளராக இருந்த பொழுது பெண் ரசிகைகள் சற்று அதிகமாகவே இருந்தது. எப்பொழுது லைவ் வந்தாலும் உடனே அத்தனை போன் கால் வந்து விடும். ஒருநாள் மொத்த ரசிகைகளுக்கும் அதிர்ச்சி கொடுக்கும் அளவிற்கு ஸ்ருதியை காதல் திருமணம் செய்தார். ரியோ ஸ்ருதியை திருமணம் செய்த பிறகு அதிர்ஷ்டம் கதவை தட்டுவது போல் பட வாய்ப்புகள் ரியோவுக்கு குவிய தொடங்கியது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் கொடுத்த பிரியாணி..! சாப்பிட்டவர்கள் கூறிய அந்த வார்த்தை..! இப்படி ஆயிடுச்சே..!

அப்படி கடந்த 2019-ல் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான ரியோ, அடுத்து 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்திலும் ஹீரோவாக நடித்தார், மேலும்,கடந்த ஆண்டு வெளியான "ஜோ" படத்தில் கல்லூரி காதல் தொடங்கி விருப்பம் இல்லா திருமணம் வரை காமித்து, பிறகு காதலை உணர்த்தும் வகையில் சிறப்பாக நடித்தார். இதற்கு இடையில் தனியார் தொலைகாட்சி டான்ஸ் ஷோவில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில், கதாநாயகியான கோபிகா ரமேஷ் உடன் ரியோ ராஜ் கதாநாயகனாக "ஸ்வீட்ஹார்ட்" படத்தில் நடித்திருக்கிறார். மார்ச் 14ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து ரசிகர் ஒருவர் "ஸ்வீட்ஹார்ட்" படத்தின் அப்டேட்டை எப்பொழுது கொடுப்பீர்கள் என கேட்டதற்கு "விரைவில்" என பத்தி கூறி இருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

மார்ச் மாதம் வெளியாகும் படம் ஜோ அளவுக்கு இருக்குமா... புது இயக்குனர் ஹார்ட் பீட்டை எகிற விடுவாரா என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காத்திருப்பே வெறி ஏற்றுதே..! அடுத்த டீசருக்கான அப்டேட்.. இதயத்துடிப்பை எகிற வைக்கும் படம்..!