அஜித்குமார் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் ரிலீஸின் போது, சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிப்பது வழக்கமானது. அந்த வகையில் நாளை ரிலீஸ் ஆக உள்ள அஜித்குமாரின் விடாமுயற்சி படத்திற்கான சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “வரும் 6 மற்றும் 7 ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சியினை காலை 9 மணிக்கு திரையிட அனுமதி படக்குழு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை பரிசீலித்து படம் வெளியாகும் 6-ம் தேதி மட்டும் ஒருநாள் சிறப்புக் காட்சி திரையிட அனுமதியளிக்கப்படுகிறது. அதன்படி முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி கடைசி காட்சி இரவு 2 மணி வரை (ஒரு நாளைக்கு 5 காட்சிகள் மட்டும்) திரையிடலாம்” என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: த்ரிஷாவுடன் ரொமான்ஸில் உருகும் அஜித்; 'விடாமுயற்சி' பட நியூ கிளிக்ஸ்!
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, ஆரவ், அர்ஜூன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக பொங்கல் பண்டிகையாக விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, நாளை உலகம் முழுவதும் படத்தை ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கி, பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே, அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு தினங்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுத்து தமிழ்நாடு அரசு அசத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரெண்டு பேருமே இதுக்காகத் தான் பண்றாங்க... விஜய், அஜித்தை ஒரே வார்த்தையில் காலி செய்த பார்த்திபன்!