தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது உலக சினிமாக்களில் இதுவரை 1500 பாடல்களுக்கும் மேலாக பாடிய பெருமை உடையவர் கல்பனா, இவரை தமிழ் மக்கள் அதிகம் பார்த்த நிகழ்ச்சி என்றால் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தான். அடிக்கடி தொகுப்பாளர் பிரியங்காவிடம் சவால் விட்டு பணத்தை பறிகொடுப்பார் அந்த அளவிற்கு மிகவும் நகைச்சுவை குணம் கொண்டவர் கல்பனா.

இப்படி இருக்க, பாடகி கல்பனா தனது, 5 வயதிலேயே முதல் பாடலை பாட தொடங்கினார். அதன் பின் மதுரை டி.ஸ்ரீநிவாஸனிடம் கர்நாடக இசையை முறைப்படி கற்றுள்ளார், இசை குடும்பத்தை சேர்ந்த இவர் மலையாளத்தில் ஸ்டார் சிங்கர் பாடல் நிகழ்ச்சியில் வெற்றியாளராக வந்துளாளர்.அதுமட்டுமல்லாமல் தெலுங்கு பிக்பாஸின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: 2 நாட்களாக பூட்டிய வீட்டில்... பிரபல பாடகி எடுத்த விபரீத முடிவு!!

முதலில் பின்னணி பாடகியாக கலம் இறங்கிய கல்பனா, பின் படிப்படியாக முன்னேறி இதுவரை 2000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்,மேலும் உலகம் முழுவதும் இதுவரை 3000க்கும் மேலான மேடை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்த நிலையில், தெலுங்கானாவின் ஐதரபாத்தில் உள்ள நிசம்பத் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கல்பனாவின் வீட்டின் கதவு இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பககத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த போலீசார் பூட்டிய கதவை உடைத்து மயங்கி இருந்த கல்பனாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு ணைப்பி வைத்தனர். அங்கு கல்பனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்து இருந்தனர்.

இந்த சூழலில், கல்பனாவின் உடல் சற்று தேறி வருவதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையை அவர் கடந்து விட்டதாகவும் தற்பொழுது வெண்டிலேட்டர் உதவியுடன் அவரை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அவர் கண் விழித்ததும் நடந்தது தற்கொலை முயற்சியா அல்லது வேறேதும் காரணமா என கூறப்படும் என்றும் உறவினியர்கள் மற்றும் கல்பனாவின் கணவரிடமும் விசாரித்து வருவதாகவும் காவல் துறை தரப்பில் இன்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் டிவிட்டரில் #savekalpana என்ற ஹாஸ்டாகும் பரவி வருகிறது.
இதையும் படிங்க: சேலம் மக்களுக்கு ஓர் நற்செய்தி..சேலம் மண்ணில் கால் பதிக்கும் நடிகை கயாடு லோஹர்...!