கார் ரேஸ் வெற்றிக்குப் பிறகு அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் குறித்து பேசியுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.
துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்குமாரின் அணி 3வது இடம் பிடித்ததை அவரது ரசிகர்கள் பொங்கல் பண்டியை விட விமர்சியாக கொண்டாடி வருகின்றனர். ஜனவரி 12ம் தேதி நடைபெற்ற போட்டியில் அஜித் அணி 3வது இடம் பிடித்து துபாயில் இந்திய கொடியை பட்டொளிவீசிப் பறக்கவிட்ட வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையத்தில் தாறுமாறு வைரலாகி வருகிறது. இதனிடையே பேட்டி ஒன்றில் தனது ரசிகர்கள் எப்படியிருக்க வேண்டும் என அஜித் தெரிவித்திருக்கும் வீடியோ அதிக கவனம் ஈர்த்து வருகிறது.
துபாய் கார் ரேஸ்:
நடிகர் அஜித்குமார் சினிமாவிற்கு அடுத்தப்படியாக கார் ரேஸ் மீதும் அளவற்ற ஆர்வம் கொண்டவர். இதனால் ‛அஜித்குமார் ரேஸிங்' என்ற நிறுவனத்தை தொடங்கிய அவர், பாயில் நடந்து வரும் '24எச்' ரேஸிலும் தனது அணியை பங்கேற்கவைத்தார். இந்த ரேஸில் நடிகர் அஜித்குமாரும் கார் ஓட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜனவரி 7ம் தேதி பயிற்சியில் ஏற்பட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நடிகர் அஜித் கார் விபத்தில் சிக்கினர். இதில் அவர் காயமின்றி உயிர் தப்பியிருந்தாலும், உடல் நலன் மற்றும் அணியின் நலனைக் கருத்தில் கொண்டு துபாய் 24H கார் ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையும் படிங்க: கார் ரேஸிங்கில் வெற்றி வாகை சூடிய அஜித்தின் Unseen போட்டோஸ்!

இதனிடையே கடந்த ஜனவரி 12ம் தேதி நடைபெற்ற போர்ஷ்சே 991 கப் கார் ரேஸில், அஜித் அணி 3வது இடம் பிடித்து அசத்தியது. இதற்காக ஜிடி4 பிரிவில் ‛ஸ்பிரிட் ஆப் தி ரேஸ்' எனும் விருதும் வழங்கப்பட்டது. இந்திய கொடியுடன் முக மலர்ச்சியுடன் அஜித் ஆராவாரம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.
ரசிகர்களால் மனம் உருகிய அஜித்:
அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை நேரில் காண, ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்துள்ளனர். போட்டியை நடத்துபவர்கள் அஜித் குமாருக்காகக் குவிந்துள்ள ரசிகர்களைக் கண்டு வியந்துள்ளனர். கார் பந்தயத்துக்கு இடையில் பேட்டியளித்த அஜித் ,‘‘உண்மையில், இவ்வளவு ரசிகர்கள் வருவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. அவர்களை நான் அளவுகடந்து நேசிக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் குடும்பத்தையும், வாழ்க்கையையும் பாருங்கள், இந்த நிமிடத்தை என்ஜாய் செய்து வாழுங்கள் என்ற அட்வைஸை எப்போதுமே தனது ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். துபாயில் தனது அணியின் ரேசிங்கைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்ததை எண்ணி நெகிழ்ந்து போன அஜித்குமார், அதேசமயம் அவர்களது நல்வாழ்க்கைகான அறிவுரையும் கூறியுள்ளார்.
போய் பொழப்ப பாருங்க:
துபாய் கார் ரேஸ் வெற்றிக்குப் பிறகு நடிகர் அஜித்குமார் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “ரசிகர்களின் செயல்கள் நெகிழ வைக்கிறது. ஆனால் “அஜித் வாழ்க, விஜய் வாழ்க” எனக்கூறும் நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள்? என ரசிகர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். நீங்கள் வாரி வழங்கும் அன்பிற்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். ஆனால் எனது ரசிகர்கள் வாழ்க்கையில் நன்றாக இருந்தால் தான் எனக்கு முழு மகிழ்ச்சி கிடைக்கும். எனது ரசிகர்கள் என்னைப் போலவே பிற சினிமா நடிகர், நடிகைகளையும் மதிக்க வேண்டும். அவர்களைப் பற்றி நல்லப்படியாக பேச வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Ketaare oru kelvi 🤐🥲❤️#AjithKumar pic.twitter.com/ZqnzzdjsrP
— Trollywood 𝕏 (@TrollywoodX) January 13, 2025
அஜித்குமார் தனது ரசிகர்களுக்கு வழங்கியுள்ள இந்த அட்வைஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 45 வயதிலும் ஒர்க் அவுட்டில் மிரட்டும் அஜித் பட நாயகி மாளவிகா!