தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக அறியப்படும் கீர்த்தி சுரேஷ், விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவருடைய தந்தை சுரேஷ் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் என்பதால், சிறு வயதிலேயே மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்தது.

இதையும் படிங்க: திருமணத்திற்கு பின் கூடிய அழகு! ரம்யா பாண்டியன் பகிர்ந்த ஹனி மூன் போட்டோஸ்!
படித்து முடித்ததும், நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் பெற்றோர் சம்பந்தத்துடன் 'கீதாஞ்சலி' என்கிற மலையாள படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து தமிழில் 2015 ஆம் ஆண்டு 'இது என்ன மாயம்' என்கிற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இயக்குனர் எ.எல். விஜய் இயக்கியிருந்த இந்த படத்தில், விக்ரம் பிரபு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். தன்னுடைய அழகாலும், நடிப்பாலும், முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷுக்கு இப்படத்தின் தோல்வியால் ராசி இல்லாத நடிகை எனபெயர் கிடைத்தது. இந்த தகவலை அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூட கீர்த்தி சுரேஷ் அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான 'ரஜினி முருகன் 'சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதன் பின்னர் தனுஷ்க்கு ஜோடியாக நடித்த தொடரி தோல்வியை சந்தித்தது.

இந்த படத்தின் தோல்வியில் இருந்து இவர் மீண்டு வர உதவியது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரெமோ திரைப்படம் தான். மேலும் விஜய்க்கு ஜோடியாக பைரவா, பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக பாம்பு சட்டை போன்ற படங்களில் நடித்தார்.

பெரிய ஹீரோக்கள் படங்களையும், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் உருவான 'மகாநடி' திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றார்.

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த படம், மொழி தாண்டி பாலிவுட் ரசிகர்களாலும் அதிகம் ரசிக்கப்பட்டது. அடுத்தடுத்து சில தோல்வி படங்களை சந்தித்தாலும் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் நடிக்கவே கீர்த்தி சுரேஷ் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் இவர் கதையின் நாயகியை மையப்படுத்தி நடித்த பெண்குயின், மிஸ் இந்தியா, குட் சகி, ரகு தாத்தா, போன்ற படங்கள் விமர்சன ரீதியாக ஓரளவுக்கு பேசப்பட்டாலும்... வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது.

32 வயதை எட்டியவுடன் சைலன்டாக தன்னுடைய காதலருடன் திருமணத்திற்கு தயாரான கீர்த்தி சுரேஷ் ,இந்த தகவலை திருமணத்தின் நெருக்கத்தின் போது தான் வெளியிட்டார். திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து தன்னுடைய காதல் குறித்தும், காதலர் பற்றியும் பல தகவல்களை பகிர்ந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

மேலும் இவருடைய திருமணம் கோவாவில் நடைபெற்ற நிலையில், இதில் மாளவிகா மோகனன் தளபதி விஜய், திரிஷா, அட்லி, போன்ற ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

மேலும் திருமணம் முடித்த கையோடு பேபி ஜான் படத்தின் பிரமோஷனில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த கீர்த்திக்கு, இந்த படம் தோல்வி அடைந்தாலும் அதில் இருந்து வெளியேறி தற்போது ஹனிமூன் சென்றுள்ளார்.

அந்த வகையில் தற்போது தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றுள்ள கீர்த்தி சுரேஷ் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் உடையில் கிக் ஏற்றும் ஹன்சிகா!