பொதுக் கூட்டத்திற்கு ஆள் சேர்க்க குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அதிமுக, பாஜக பொதுக்கூட்டங்களில் காலி சேர்களை போட்டோ, வீடியோ எடுத்து பதிவிட்டு ட்ரெண்ட் செய்வது நீண்ட கால வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக திமுக உடன்பிறப்புகள் இத்தகைய வீடியோக்களை அதிக அளவில் ஷேர் செய்து ட்ரால் செய்வார்கள். தற்போது அதுபோன்ற அவப்பெயரில் இருந்து தப்பிக்க அதிமுக புதுவகையான முறையைக் கையாண்டுள்ளது.

பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவும் அடங்கும் இந்த நிலையில் வருகின்ற 5-ம் தேதி ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஊத்துக்குளி பகுதியில் நடைபெறுகிறது இதில் முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் ,கே சி கருப்பன் ,தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். சமீபகாலமாக அதிமுக பொதுக்கூட்டங்களுக்கு பொதுமக்களின் வருகை மிகவும் குறைந்த விகிதத்திலேயே இருந்து வருகிறது. பொதுக்கூட்டம் நடத்தப்படும் இடங்களில் ஏராளமான காலியான இருக்கைகளை அதிகம் பார்க்க முடிகிறது. எனவே அதிக அளவில் பொதுமக்களை திரட்டும் போட்டு அதிமுகவினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நீங்க 2001இல்தான் எம்.எல்.ஏ... நான் 1989இலேயே எம்.எல்.ஏ.. ஓபிஎஸ் சொந்த ஊரில் மாஸ் காட்டிய இபிஎஸ்..!

அதன் ஒரு பகுதியாக வருகின்ற ஐந்தாம் தேதி ஊத்துக்குளியில் நடக்கும் கூட்டத்திற்கு கூட்டத்தைக் கூட்டுவதற்கு அதிமுக புது வகையான ஒரு யுக்தியை கையாண்டுள்ளது பிறந்தநாள் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு குலுக்கல் முறையில்
3-நபர்களுக்கு தங்க நாணயம் மற்றும் 300 நபர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் மிக்சி ,குக்கர், கிரைண்டர், பீரோ ,பேன், சில்வர் பாத்திரங்கள் குலுக்கல் முறையில் பரிசு பொருட்களாக வழங்கப்பட உள்ளது மேலும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது என அதிமுகவினர் சார்பில் தற்பொழுது ஊத்துக்குளி பகுதி முழுவதுமே துண்டு பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் பொதுக் கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பதற்கு அரசியல் கட்சிகள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டுள்ளது அதில் தற்பொழுது குலுக்கல் முறையை அதிமுக கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருந்துறையில் நடந்த பொதுக்கூட்டத்தில், கலந்துகொண்ட பொதுமக்களுக்கு அவர்கள் உட்கார்ந்து இருந்த நாற்காலிகள் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிரடியாக மாறிய கூட்டணி... உறுதியானது அதிமுக+ பாமக+ தவெக+ நாதக இணைப்பு… திகிலில் ஸ்டாலின்..!