குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிஷா வர்மா (வயது 24). இவர் குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது தோழிகளுடன் தங்கி உள்ளார். சென்னையில் உள்ள தனியார் விமான நிறுவனத்தில் விமான பணி பெண்ணாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் அபிஷா வர்மாவின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்ததால் அவரது நண்பர்கள் பதற்றமடைந்தனர். துபாயில் உள்ள அவரது தாய்க்கு தோழிகள் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர்.
அப்போது அபிஷா வர்மா, புதிய அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை சென்றுள்ளதாகவும் அங்கு சென்று பார்க்குமாறும் அவரது தாயார் கூறி உள்ளார். இந்த நிலையில் புதிய அடுக்குமாடி குடியிருப்புக்கு அவரது தோழிகள் சென்று பார்த்த போது அங்கே அபிஷா வர்மா தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு அபிஷா வர்மாவின் தோழிகள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்து கிடந்த அபிஷா வர்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அபிஷா வர்மாவின் தந்தை சிறுவயதில் இறந்து போன நிலையில் அவரது தாய் வேறொரு திருமணம் செய்து கொண்டு வெளிநாடு சென்று விட்டதாக தெரியவந்தது.
இதையும் படிங்க: பழிக்கு பழி தீர்க்க திட்டம்.. தம்பி கொலையால் அண்ணன் ஆவேசம்.. பட்டாக்கத்தி, வெடிகுண்டுகள் பறிமுதல்..!

அபிஷா வர்மா கடந்த 2022 ஆம் ஆம் ஆண்டு வரை துபாயில் தாயுடன் வசித்து வந்துள்ளார். அதன் பிறகு விமானத்தில் பணிப்பெண் வேலை கிடைத்ததால் இங்கு தோழிகளுடன் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது தாய், தன்னை பார்ப்பதற்கு இந்தியா வராமல் இருந்து வந்தால் அபிஷா வர்மா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மன உளைச்சலால் தனியாக சென்று விட முடிவு செய்த அபிஷா வர்மா, தற்போது தோழிகளுடன் வசித்து வந்த வீட்டிலிருந்து வேறு வீட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

தனியாக செல்வதற்காக பொருட்களை எல்லாம் இடம் மாற்றி வைத்திருந்ததாகவும், அப்போது கூட தன்னை வெளிநாட்டில் உள்ள தாய் தன்னை பார்க்க வராததால் மன உளைச்சலில் புதிதாக சென்ற வீட்டில் அபிஷா வர்மா தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். வெளிநாட்டில் உள்ள தாய் தன்னை பார்க்க வராததால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. இதுபோன்ற தற்கொலை எண்ணம் உங்களுக்கு மேலோங்கினால், அதிலிருந்து வெளிவரவும், புதியதொரு வாழ்க்கையினைத் தொடங்கிடவும், உங்களுக்கான ஆலோசனைகளை எந்த நேரத்திலும் வழங்கிடவும் அரசும் சினேகா போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் காத்துள்ளன.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104, சினேகா தன்னார்வத் தொண்டு நிறுவனம் - +91 44 2464 0050, +91 44 2464 0060.
இதையும் படிங்க: இன்ஸ்டா ஐடி சொல்லு? தனியாக வந்த சிறுமிகளிடம் அத்துமீறல்.. கத்தியை காட்டி மிரட்டிய சிறுவர்கள் கைது..!