இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி ஷண்முகம் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, பரணி நடுஇரவில் சௌந்தரபாண்டி வீட்டிற்கு வர பாக்கியம் இந்த நேரத்துல இங்க என்னடி பண்ற என்று கேட்க வீட்டிற்கு வந்த பொண்ணை வானு சொல்லாமல் கேள்வி கேட்குற என்று கோபப்படுகிறாள்.
நீ ஷண்முகத்தோட வந்து இருந்தா வா என்று கூப்பிட்டு இருப்பேன். ஆனால் தனியா வந்திருக்கியே ஒழுங்கா வீட்டிற்கு கிளம்பி போய்ட்டு என சொல்கிறாள். இதற்க்கு சொந்தரபாண்டி என் பொண்ணு இங்க தான் இருப்பா என்று பரணிக்கு சப்போர்ட் செய்து பேசி உள்ளே அழைத்து செல்கிறார். பாண்டியம்மா என்னடா திடீர்னு பரணிக்கு சப்போர்ட் பண்ணி பேசுற என்று கேட்க அவ சண்டை போட்டு வந்திருக்கா.. இதையே காரணமாக வச்சி அவங்க இரண்டு பேரையும் பிரிக்க போறேன் என்று திட்டத்தை சொல்கிறார்.

பரணி பாக்கியத்திடம் அப்பா என்னையும் சண்முகத்தையும் பிரிக்க தான் எனக்கு சப்போர்ட் செய்து பேசுறாரு.. அதை நான் பார்த்துக்கறேன் என்று சொல்கிறாள். மறுபக்கம் சண்முகம் தூக்கம் வராமல் நான் உன்னை புரிந்து கொள்ளலயா என்று புலம்புகிறான்.
இதையும் படிங்க: சரக்கால் சிக்கிய வெங்கடேஷ்... வேட்டையாட தயாரான சண்முகம்! அண்ணா சீரியலின் அப்டேட்!
இங்கே பரணி எப்பவுமே உனக்கு தங்கச்சிங்க தான் முக்கியம்.. இந்த முறை நான் அமைதியா போக போறது இல்ல என்று சொல்கிறாள். இதையடுத்து அடுத்த நாள் காலையில் சண்முகம் திண்ணையில் வந்து படுக்க அங்கு வந்த சௌந்தரபாண்டி என் பொண்ணு இல்லாமல் போன முதல் நாளே திண்ணைக்கு வந்துட்டான் என்று வம்பிழுக்கிறார்.
பரணி அவ பொருள் எல்லாத்தையும் கொண்டு வர சொன்னதாக சொல்கிறார். சண்முகம் அதை நம்ப மறுக்க சௌந்தரபாண்டி நான் வேணும்னா அவளையே வந்து சொல்ல சொல்லவா என்று கேட்கிறார். சண்முகம் நானே கேட்கிறேன் என்று பரணிக்கு போன் போட சௌந்தரபாண்டி ஷாக் ஆகிறார்.

ஆனால் பரணி போன் எடுக்காத காரணத்தால் சண்முகம் பரணியின் பொருட்களை தூக்கி வீசுகிறான். அடுத்து அவ கிட்ட உன் சம்மதமாக பொருள் ஒன்னு இருக்கு.. கூடிய சீக்கிரம் தாலி உன்னை தேடி வரும் என்று சொல்லி கிளம்பி வருகிறார்.
வீட்டிற்கு வந்த சௌந்தரபாண்டி சண்முகம் இனிமே நீ அந்த வீட்டு பக்கம் வந்துட கூடாது என்று பொருட்களை கொடுத்து விட்டு சென்றதாக பொய் சொல்கிறார். பாக்கியம் அதை நம்ப மறுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
இதையும் படிங்க: ரத்னாவுக்காக ஷண்முகம் எடுத்த சபதம்! வெங்கடேஷ் சிக்க போவது எப்படி? அண்ணா சீரியல் அப்டேட் !