ரஷ்மிகா மந்தண்ணா கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தின் விராஜ்பேட்டையில் கௌடவ குடும்பத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடித்த 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இப்படத்தை தொடர்ந்து, 2018-ம் ஆண்டு "சலோ" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளர். பின்னர் அதே ஆண்டு, விஜய் தேவர்கொண்டா உடன் 'கீதா கோவிந்தம்' என்னும் திரைப்படத்தில் நடித்து தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய அத்தனை மொழி திரையுலகிலும் பிரபலமானார்.

இதனை அடுத்து, கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டி என்பவரை ராஷ்மிகா காதலித்தார், பின் இவர்களது நிச்சியதார்தம் 2017 ஜூலை நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருமணம் நடக்க இருக்கும் வேளையில் 2018ம் ஆண்டு இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதனால் மனவேதனையில் இருந்த ராஷ்மிகா, தனது மனவேதனையை போக்க அடுத்தடுத்து வந்த படங்களில் எல்லாம் நடித்தார். அதன்படி, டியர் காம்ரேட், புஸ்பா (தி ரைஸ்),சுல்தான், சீதா ராமம், அனிமல், வாரிசு, குபேரா, புஷ்பா (தி ரூல்) போன்ற தமிழ் படங்களில் நடித்து உள்ளார். தற்பொழுது சிவகார்த்திகேயன் படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆர்யா சந்தானம் கூட்டணியில் பார்ட் 2...! இயக்குனர், தயாரிப்பாளர் கொடுத்த மறைமுக அப்டேட்..!

இந்த சூழலில் நடிகை ராஷ்மிகா கன்னட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் கன்னட மக்களையும் கன்னட ரசிகர்களையும் அவமதித்து விட்டார் என கூறி, அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பிரச்சனை செய்து வந்தனர். இதனால் ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு வேண்டும் என அவரின் சமூகத்தினர் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்து அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தனர்.

இந்த சூழலில், சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தண்ணா நடிப்பில் வெளியான "சாவா" படம் பல கோடிகளை கடந்து வெற்றி படமாக மாறி இருந்தது. குறிப்பாக மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி-சாயி பாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட இப்படம் ரூ.130 கோடி பட்ஜெட்டில் தயாராகி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் காதலர் தினம் அன்று வெளியானது.
முழுக்க முழுக்க ஹிந்தியில் உருவாகிய இந்த படம் இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் அனைத்து மொழிகளிலும் வெளியானது. இப்படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் விக்கி கவுசலும் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகாவும் நடித்து இருந்தனர். இப்பட வெற்றியை கொண்டு ரசிகர்கள் ராஷ்மிகாவை புகழ்ந்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, தற்பொழுது பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ள ராஷ்மிகா, சிக்கந்தர் திரைபடத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளிவந்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ள நிலையில், சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து வருவதை குறித்து ராஷ்மிகா பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

அதன்படி, "இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் என்றால் அவர் சல்மான் கான் தான், அப்படிப்பட்டவருடன் இணைந்து சிக்கந்தர் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சாய்ப்பல்லவியை பின்னுக்கு தள்ளிய பிரியங்கா சோப்ரா.. கம் பேக் கொடுத்து அசத்தல்..!