"இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய மெகாஹிட் திரைப்படம்" என்ற வாசகம் ஒளிபரப்பானால் அனைவரது எண்ணத்திற்கு வரும் முதல் விஷயம் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தான். அப்படிபட்ட தொலைக்காட்சி தான் ஆரம்பத்தில் இருந்து தற்பொழுது வரை சீரியல்களை ஒளிபரப்பாகி மக்களை சந்தோஷப்படுத்துவதில் டாப் நம்பர் 1.

இதுவரை அந்த தொலைக்காட்சி சீரியல்களில் "சித்தி, சின்னப்பாப்பா பெரியப்பப்பா, மைடியர் பூதம், மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், வாணி ராணி" போன்ற சீரியல்கள் மக்களின் மனதை கவர்ந்து பிரபலமாக ஓடிய சீரியல்கள் எனலாம். இப்படிப்பட்ட தொலைக்காட்சியை சீரியலில் பின்னுக்கு தள்ள புதிய அவதாரம் எடுத்து உருவானது மற்றொரு பிரபல தொலைக்காட்சி நிறுவனம். அதில் "சரவணன் மீனாட்சி, கணா காணும் காலங்கள், ஆஃபீஸ், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, நாம் இருவர் நமக்கு இருவர்" போன்ற அதிரடியான சீரியல்களை களமிறக்கி இளசுகளின் நெஞ்சை கரைத்து சீரியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது.
இப்படி இரண்டாவது இடத்தில் இருந்த தொலைக்காட்சியை டிஆர்பியில் நம்பர் ஒன் ஆக கொண்டுவந்த சீரியல் என்றால் அதுதான் தற்பொழுது இரண்டு வருடங்களை கடந்து மிகவும் சிறப்பாக ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை".
இதையும் படிங்க: பாடல் நிகழ்ச்சியில் தனது ஆசையை கூறிய பெண்..! சற்றும் தயங்காமல் ராகவா லாரன்ஸ் செய்த செயல்...!

இந்த சீரியலில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, சால்மா அருண், அனிலா குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இப்படி இருக்க, இந்த சீரியலில் அண்ணாமலை மற்றும் விஜயா ஆகிய தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். அதில் முத்த மகனான 'மகோஜ்', பார்லர் வைத்திருக்கும் 'ரோகிணி'யை திருமணம் செய்து கொண்டார், கதையின் கதாநாயகனான 'முத்து' பூக்கட்டி விற்பனை செய்யும் 'மீனா'வை திருமணம் செய்து கொண்டார். அதே போல் 'ரவி' டப்பிங் ஆர்டிஸ்ட்டான 'ஸ்ருதி'யை திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒரே வீட்டில் எட்டு பேர் கொண்ட குடும்ப பாங்கான கதை தான் இந்த "சிறகடிக்க ஆசை" சீரியல்.

இந்த சீரியலில் மக்களின் ஆழ் மனதில் வில்லியாகவும் பித்தலாட்ட காரியாகவும் அனைவரது மனதில் நடிப்பால் குடிபுகுந்த கேரட்ர் என்றால் அது ரோகிணி கேரக்டர் தான். இவர் எப்பொழுது குடுத்பத்திடம் சிக்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இப்படி பட்ட ரோகிணிக்கு தோழியாக 'வித்யா' எனும் கேரக்டரில் நடித்து வருபவர் தான் ஸ்ருதி நாராயணன். இந்த சீரியலில் ரோகிணிக்கு துணை நிற்பதோடு அடிக்கடி அவருக்கு தக்லைஃப் கொடுத்து வரும் இவர் மிகவும் பிரபலமாகி உள்ளார்.

இப்படி நடிப்பில் மிகவும் பிசியாக இருக்கும் ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ இணையத்தில் கடந்த இரண்டு நாட்களாக உலா வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த சிலர் இது 'ஏய் தொழில்நுட்பம்' மூலமாக உருவாக்கப்பட்ட மார்பிங் வீடியோ என கூறிவந்தனர்.
மறுபக்கம், இது ஒரு 'casting couch வீடியோ', சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஸ்ருதியை இவ்வாறு செய்ய வைத்தி இருப்பார்கள் எனவும் இருபுறமும் மாறி...மாறி... பேசி பலர் பதிவிட்டு வந்த நிலையில், தனது அனைத்து இணையதள பக்கங்களையும் பிரைவேட்டில் போட்டு அமைதியாக இருந்தார் ஸ்ருதி நாராயணன்.

திடீரென தவறு செய்யாத நாம் ஏன் அமைதியாக இருக்க வேண்டும் என முடிவெடுத்த ஸ்ருதி, பிரைவேட்டில் போட்டிருந்த தனது இன்ஸ்டா தளத்தை மீண்டும் அனைவரும் பார்க்கும் வண்ணம் மாற்றி, நச் என ஸ்டோரி போட்டு அனைவரது வாயையும் அடைத்துள்ளார். அதன்படி அவர், அந்த ஸ்டோரியில், தான் புடவையில் நடத்திய போட்டோஷூட் ஒன்றை பதிவிட்டு, பிறகு ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு இருந்தார்.
அதில் இரண்டு பெண்கள் ஒரே முக சாயலில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் ரியல், மற்றொருவர் ஏஐ.. சரியானதை கண்டுபிடியுங்கள்? என கேட்டு, அதற்கு பின், உண்மையான பெண் யார், ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட பெண் யார் என்பதையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். இதன்மூலம் தன்னைப்பற்றி பரவும் வீடியோ ஏஐ மூலம் மார்பிங் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை சூசகமாக அறிவித்திருக்கிறார் ஸ்ருதி.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏய் தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது என ஒரு அறிவியல் மேதாவி அப்பொழுதே கூறினார். இப்பொழுது கண்களுக்கு முன்பாக அனுபவித்து கொண்டு இருக்கிறோம் இனி என்ன நடக்குமோ என தங்களது ஆதங்கத்தை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குட்டீஸ் தேடிய விஜய் டிவி நடிகை ஷிவாங்கி: நானும் ரௌடிதான் தட்டித்தூக்கியது எப்படி..?