எலான் மஸ்க்கின் டெஸ்லா பேட்டரி காரை இந்தியாவில் உள்ள நடுத்தர மக்கள் வாங்க முடியாத விலையில் இருக்கிறது. டெஸ்லா காருக்கான இறக்குமதி வரியை 20 சதவீதத்துக்கும் கீழாக மத்திய அரசு குறைத்தாலும், அதை இந்திய நடுத்தரக் குடும்பத்தினரால் வாங்குவது கடினம்.
இந்தியாவில் நடுத்தரக் குடும்பங்கள் , உயர் நடுத்தரக் குடும்பங்கள் வாங்கும் கார்களின் விலை சராசரியாக ரூ.4 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரைதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்லா காருக்கான இறக்குமதி வரியை 20 சதவீதத்துக்கும் கீழாக மத்திய அரசு குறைத்தாலும் டெஸ்லா காரின் விலை ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை இருக்கும் என சிஎல்எஸ்ஏ என்ற குளோபல் மார்க்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் “டெஸ்லா காரின் விலை மலிவான மாடலான மாடல்-3 விலை அமெரிக்காவில் 35ஆயிரம் டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.35 லட்சமாகும். இது தொழிற்சாலை மதிப்பு. இந்த காருக்கு மத்திய அரசு இறக்குமதி வரிசை 15 முதல் 20 சதவீதமாகக் குறைக்கும் பட்சத்தில் சாலைவரி, காப்பீடு என ஏறக்குறைய 40ஆயிரம் டாலர்களைத் தொடும். ஏறக்குறைய ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை ஆகும்.
உள்நாட்டு தயாரிப்புகளான மகேந்திராஇவி, ஹூண்டாய் இ கிரெட்டா, மாருதி சுஸுகியின் இ விடாரா ஆகியவற்றின் விலையை விட டெஸ்லாவின் விலை மலிவான மாடல்-3 கார் விலை 20 முதல் 50 சதவீதம் வரை அதிகம் என்பதால், எந்த வகையில் இந்தியாவின் உள்நாட்டு நிறுவனங்களின் கார்கள் விற்பனையை பாதிக்காது.
இதையும் படிங்க: என்ன வேலை பார்த்தீங்க..! பீதியில் அரசு ஊழியர்கள்..! 48 மணி நேர கெடு விதித்த எலான் மஸ்க்..!

ஒருவேளை இந்தியாவுக்கு ஏற்றார்போல் ரூ.25 லட்சத்துக்கு கீழாக கார்களை தயாரிக்க டெஸ்லா நிறுவனம் முடிவு செய்தால், சந்தையில் மிகப்பெரிய பங்குகளை பிடிக்க வாய்ப்புண்டு. இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தனது கிளைகளை அமைத்து கார்களை விற்பனை செய்தாலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் உள்நாட்டு கார்கள் விற்பனையை எந்தவிதத்திலும் பாதிக்காது. இந்தியாவில் உள்ள பேட்டரி கார்கள் விலை சீனா, ஐரோப்பா, அமெரிக்காவைவிட விலை குறைவு என்பதால், எந்த விதத்திலும் பாதிக்காது.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால்பதிப்பதற்காக ஆட்களை எடுப்பதற்கான விளம்பரத்தை லிங்க்டுஇன் பக்கத்தில் வெளியிட்டு ஏறக்குறைய 15 வகையான பிரிவு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் டெஸ்லா கார் விற்பனைகம் (ஷோரூம்) புதுடெல்லியில் இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்துக்கு அருகே ஏரோசிட்டியில் முதல் விற்பனையகத்தை திறக்கும் எனத் தெரிகிறது. இந்த ஷோரூமில் விற்பனைநிலையம், சர்வீஸ் மையம், கார்ப்பரேட் அலுவலகம் அனைத்தையும் ஒருசேர வைக்கவும் டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மும்பையில் விமானநிலையத்துக்கு அருகே பாந்த்ரா குர்லா காம்ப்ளஸ் பகுதியில் டெஸ்லா ஷோரூம் அமைக்கப்பட உள்ளது. டெல்லி, மும்பை ஆகிய இரு மெட்ரோபாலிட்டன் நகரங்களிலும் 5ஆயிரம் சதுர அடிக்கு குறைவில்லாமல் டெஸ்லா ஷோரூம் அமைய இருக்கிறது. முதலில் புதுடெல்லியில் அமைய இருக்கும் டெஸ்லாவின் ஷோரூம் ஏப்ரல் மாதத்தில் திறக்கப்படலாம் என்று அந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எலோன் மஸ்க் அதிகாரமில்லா வெறும் ஊழியர்தான்... வெள்ளை மாளிகை விளக்கம்..!