பார்ப்பது போலீஸ் வேலை ஆனால், எந்நேரமும் இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு இன்ஸ்டா குயினாக மாறியவர். ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர் பஞ்சாப் காவல்துறையின் பெண் காவலர் அமன்தீப் கவுர்.
பஞ்சாப் காவல்துறை அவரை அமந்தீப் கவுரை பணியிலிருந்து நீக்கியது. பதிண்டா மாவட்டத்தில் 17.71 கிராம் ஹெராயினுடன் பிடிபட்டார். அமன்தீப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், அதன் மூலம் சொகூசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது எஸ்யூவி காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்த காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) சுக்செயின் சிங் கூறுகையில், ''கான்ஸ்டபிள் அமந்தீப் கவுர் சக் ஃபதே சிங் வாலாவில் வசிப்பவர். அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் அவர் மான்சாவில் பணியமர்த்தப்பட்டார். பின்னர் அவர் பதிந்தாவில் உள்ள காவல் நிலையத்துக்கு இடம் மாற்றப்பட்டார். முதலமைச்சர் பகவந்த் மானின் அறிவுறுத்தலின்படி அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்'' என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏசுவின் தீர்க்கதரிசி..! அறைக்குள் இளம்பெண்ணை… மதபோதகரின் அட்டூழியம்: சிசிடிவி காட்சிகளால் அதிர்ச்சி..!
முதல்வர் பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார். இந்த நடவடிக்கையின் கீழ் பெண் காவலர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அமன்தீப் கவுர் குற்றச் செயல்கள் மூலம் சம்பாதித்த சொத்துக்களையும் போலீசார் விசாரிக்க உள்ளனர். அந்த சொத்துக்கள் மீதும் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அரசின் போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் அமன்தீப் கவுர் கைது செய்யப்பட்டார்.

காவல்துறைக்கும், போதைப்பொருள் தடுப்பு பணிக்குழுவிற்கும் ஒரு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், பதிந்தாவில் உள்ள பாதல் மேம்பாலம் அருகே அமன்தீப் கவுரின் மஹிந்திரா தார் எஸ்யூவி காரை காவல்துறையினர் நிறுத்தினர்.
சோதனையின் போது, அவரிடமிருந்து 17.71 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக துணை காவல் கண்காணிப்பாளர் ஹர்பன்ஸ் சிங் தெரிவித்தார். அவரது தார் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அமன்தீப் கவுர் தனது ஆடம்பர வாழ்க்கை காவல்துறை அதிகாரிகளுக்கு ஏற்கெனவே சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது. அவர் அடிக்கடி தனது தார் காருடன் ரீல்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். இன்ஸ்டாவில் அவர் 30,000 ஃபாலோவர்களை கொண்டுள்ளார்.

சோதனை செய்வதற்காக அமன்தீப்பை நிறுத்தியபோது, அவர் சில வாட்ஸ்அப் செய்திகள், அரட்டைகள் மற்றும் புகைப்படங்களைக் காட்டியது தெரியவந்துள்ளது. இதன் மூலம் அவர் ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரி தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்று நிரூபிக்க முயன்றார்.
சில நாட்களுக்கு முன்பு அமன்தீப், ஃபாசில்காவிலிருந்து பதிண்டாவிற்கு அதிக அளவு ஹெராயின் கடத்தியதாக சந்தேகிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவரை சோதனைச் சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர் தன் காரை சோதனையிட அனுமதிக்கவில்லை. தான் ஒரு பெண் போலீஸ் என்று கூறி தப்பித்தார். இதனால் அவரைப் பணியில் இருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, டிஎஸ்பி ஹர்பன்ஸ் சிங், சில காவல்துறை அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது குறித்து புகார்கள் வருவதாகக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: போதைப்பொருட்களை ஒழிக்க திமுக என்ன செய்தது..? எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி..!