தமிழ்நாடு முதல்வர் , நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்து அவதூறு வீடியோ பதிபதிவிட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து அமைப்பு ஒன்றில் இருந்து வருவதாக கூறப்படுகின்றது. இவரது நண்பர் சந்திரசேகர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் டாஸ்மாக் பாரில் அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்த போது வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இதையும் படிங்க: சம்மட்டியால் அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்ட திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் கொந்தளிப்பு!

அதில் முதல்வர் குறித்தும், தி.மு.க எம்.பி கனிமொழி குறித்தும், துணை முதல்வர் குறித்தும் அவதூறாகவும் ஆபாசமாக பேசும் காட்சிகள் இருந்தது. இதனை பார்த்த தி.மு.க ஐ.டி விங் பொறுப்பாளர் சக்திவேல் என்பவர் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சிவாவையும், அவரது நண்பர் சந்திரசேகரனையும் காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: இதை செய்ய திமுகவுக்கு தில் இருக்கா?... நெஞ்சில் அடித்து சவால்... அமித் ஷா ருத்ரதாண்டவம்!