சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். லைக்கா புரொடக்ஷன்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது. ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தவிர, ராணா டகுபதி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரீத்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி என பலரும் இதில் நடித்திருந்தனர். கபாலி படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் இளம் தலைமுறை இயக்குநர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் பா.ரஞ்சித்துடன் கபாலி காலா, கார்த்திக் சுப்பராஜுடன் பேட்ட, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர், ஜெயிலர் 2 என வரிசையாக நடித்து வந்த ரஜினி, தற்போது லோகேஷ் கனகராஜுடன் கூலி படத்தில் நடித்திருக்கிரார். இதற்கு முன் கமலை வைத்து லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் 600 கோடி வசூலை குவித்ததை அடுத்து கூலி படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கூலி படத்தின் ஷூட்டிங் ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செட் அமைத்துப் படமாக்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இதையும் படிங்க: கூலி படப்பிடிப்பு நிறைவு... அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!
இந்த படம் ரஜினிகாந்து மிக முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் லோகேஷ் கனகராஜுக்கும் இந்தப் படம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதுவரை அவர் இயக்கிய படங்களில் லியோ தவிர்த்து அத்தனை படங்களும் ஹிட் அடித்துள்ளது. லியோவால் பெற்ற விமர்சனங்களுக்கு இந்த படத்தின் மூலம் பதிலடி கொடுக்க காத்திருக்கிறார் லோகேஷ். இந்த படத்தின் ஓடிடி உரிமம் பல கோடி ரூபாய்க்கு விலை போயிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கூலி படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதோடு சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளது. அதில், ஒரு புகைப்படத்தில் ரஜினியும், லோகேஷும் ஒரே மாதிரியான ஒரே நிற உடையில் இருப்பது போன்ற புகைப்படம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜூம் நடித்திருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: கூலி படத்தின் புதிய அப்டேட்… உற்சாகத்தில் ரசிகர்கள்!!