ரச்சிதா மகாலட்சுமி என்பதை விட, மீனாட்சி என்றால் தான் இன்று வரையிலும் பலருக்கு இவரை தெரியும். பாவாடை தாவணியில் கிராமத்தின் பெண்மையை விவரிக்கும் தோற்றத்தில் 'சரவணன் மீனாட்சி' என்ற தொடரில் நடித்து பிரபலமானவர் தான் நம்ம ரச்சிதா. இந்த சீரியலால் பலரது குடும்பத்தில் ஒருவராக பார்க்கப்பட்ட இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலக்கினார். பின் நடிக்கும்பொழுதே சக நடிகரான தினேஷை காதல் திருமணம் செய்தார்.

ஆனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை இருவரும் பிரிந்து விட்டனர். இவரது முன்னாள் கணவரான தினேஷும் பிக்பாஸில் கலந்து கொண்டு ரச்சிதாவுடன் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டார் என்பதும் அனைவருக்கும் தெரியும். அதன் பின், ஜேஎஸ்கே சதீஷ்குமார் இயக்கத்தில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடிக்கும் 'ஃபயர்' படத்தில் ஹீரோயினாக ரச்சிதா மகாலட்சுமி இணைந்து நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி அனைவரது எதிர்பார்ப்பை தூண்டியது. ஆனால் அனைத்தையும் உடைக்கும் விதமாக இப்படத்தின் ட்ரெய்லர் அமைந்தது.
இதையும் படிங்க: வசூல் வேட்டையில் மிரள வைக்கும் நே ஜா-2..! எத்தனை கோடி தெரியுமா..?

ஆனால் அதை விட இப்படத்தின் பாடல் வந்த பின் பெருமளவில் சர்ச்சையில் சிக்கினார் ரச்சிதா. காரணம் அந்தப்பாடலில் உச்சபச்சமான கிளாமரில் இருந்தார். இதனால் பலரும் அவரை வசைபாடி தீர்த்தனர். இதனை தொடர்ந்து படம் ரிலீசாக, படம் பார்த்த அனைவரும் படம் நன்றாக இருந்தாலும், ஆபாச காட்சிகளை கொஞ்சம் குறைந்து இருந்திருக்கலாம் என்றும் இந்த படம் குடும்பத்துடன் பார்க்க முடியாது என்றும் பாதுகாப்பு என்பது இல்லாத காலகட்டத்தில் இப்படி ஒரு படம் தேவையா? என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தை பார்த்த, பிரபல பத்திரிகையாளரான சேகுவேரா, ரச்சிதாவின் கிளாமர் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் 'ஃபயர்' படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டாலும், ஆபாசம் ரொம்பவே தூக்கலாக இருக்கிறது. இதை குடும்பத்துடன் பார்க்க முடியுமா? இந்த படத்தில் உள்ள நடிகைகள் அனைவருமே கிளாமராக நடித்திருந்தாலும் உச்சக்கட்டமான கிளாமரில் ரச்சிதா மகாலட்சுமி நடித்திருக்கிறார்.

இவ்வளவு ஆபாசம் எதற்கு..? இதைவிட, ரச்சிதா பேசுவதை கேட்டால் எனக்கு கோபம் தான் வருகிறது. ஏனெனில் ரச்சிதா பணத்துக்காக இப்படி ஆபாசமாக நடிக்கவில்லை என்று கூறுகிறார். பிறகு சமூக சேவைக்காகவா இப்படி ஆபாசமாக நடித்தார். சரி, சமூக சேவையாகவே இருந்தாலும் இந்த காட்சிகளுக்கு பணம் வாங்காமல் நடித்தேன் என்று ரச்சிதாவால் சொல்ல முடியுமா?.. ஏன் இப்படியெல்லாம் பேச வேண்டும் என்று கூறினார். கடைசியாக, பாபநாசம் படத்தை குடும்பத்தோடு சென்று பார்க்கலாம். ஆனால் இந்த படத்தை பார்க்க முடியாது என்று வேதனையுடன் கூறினார்.
இதையும் படிங்க: சுந்தரிக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு..! வைரலாகும் புகைப்படங்கள்..!