ஜோர்த்தாலா எனும் பாடல் விடியோ மூலம் பிரபலமானவர் ராப் இசைப் பாடகர் அசல் கோலார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார். பின்னர் நடிகர் விஜய்யின் லியோ படத்தில் நா ரெடிதான் வரவா படத்தில் ஒரு ராப் போர்ஷனை எழுதி பாடியிருப்பார். இந்தப் பாடல் மிகவும் புகழ்பெற்றது. பின்னர் யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன் பாடல் ஹிட் அடித்தது. அந்த பாடலுக்கு இன்ஸ்டா பக்கங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் குவிந்தன. அதை தொடர்ந்து மலையாள படத்தின் தமிழ் டப்பில் ஒரு பாடல் எழுதியிருந்தார்.

அதில், என்ன சண்டைக்குக் கூப்டா.. என்ற வரிகளுக்கு இளைஞர்கள் ஃபையர் விட்டனர். இதை தொடர்ந்து தற்போது ராப் பாடல்கள் மூலம் வெளிநாடுகளுக்கும் சென்று வரும் அசல் கோலார், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார். இந்த நிலையில், அவரது சமீபத்திய பேட்டி ஒன்று பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், மலேசியா சிட்டிசன் ஆன எனது நண்பர் கடந்த 2 மாதமாக இங்கு சென்னையில் தங்கி இருக்கிறார். டூரிஸ்ட் விசாவில் வந்துள்ளார்.
இதையும் படிங்க: இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த இயக்குநர்கள்.. தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்து விட்டதாக புகழாரம்..!

ஆனால் டூரிஸ்ட் விசா எக்ஸ்பைரியாகும் நிலையில், அவரது நாட்டில் இருந்து டூரிஸ்ட் விசாவை ரெனிவல் பண்ணியிருக்கார். ஆனால், டூரிஸ்ட் விசாவை எக்ஸ்டண்ட் பன்னமுடியாது என எங்களுக்கு இன்று தான் தெரியும். நானும் எனது மலேசிய நண்பரும் இதுதொடர்பாக பல அலுவலகங்களுக்கு சென்று அலைந்து திரிந்து அதிகாரிகளை சந்தித்து பேசி வருகிறோம். நாங்கள் குடியுரிமை அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, மலேசிய நண்பரிடம் எங்கு தங்கியிருக்கிறாய். எந்த இடம் நண்பர்கள் யார் என கேட்டுள்ளனர்.

அதிகாரிகள் தேவையில்லாத கேள்விகளை கேட்டதால் வாக்குவாதம் ஆனது. பின்னர், எனது நண்பரை தனியாக அழைத்து சென்று அவரை அடித்து துன்புறத்தி, கஞ்சா வைத்திருக்கியா என மோசமாக நடந்துகொண்டனர். நாங்கள் எல்லா ஆவணங்களையும் தந்த பிறகும் எல்லாம் சரிசெய்து தருகிறோம் என்கின்றனர். மத்திய அரசின் அதிகாரிகள் ஏன் இப்படி இருக்கின்றனர் என தெரியவில்லை. தமிழ்நாடு போலீஸ் தான் எனக்கு உதவி செய்தனர். நான் ஒரு பிரபலம் என்பதால் இந்த பிரச்னையை எதிர்கொள்ள முடிந்தது. சாமானிய மக்கள் என்ன செய்வார்கள் என அவர் கேள்வி எழுப்பினார். அவரது இந்த பேட்டி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 100 கோடியில் வீடு... பணத் திமிரு; ஸ்டேட்டஸ் அரிப்பு... நயனை கிழித்தெடுத்த பத்திரிக்கையாளர்!!