அதாவது, கார்த்திக் ரேவதியை தொடர்ந்து சாமுண்டீஸ்வரியும் கோவிலுக்கு வர அதை பார்த்ததும் அபிராமி மற்றும் பரமேஸ்வரி என இருவரும் மறைந்து கொள்கின்றனர்.
கோவிலில் சாமி கும்பிட்டதும் சாமுண்டீஸ்வரி கார்த்தியிடம் ரேவதி காலில் மெட்டி போட்டு விட சொல்ல ரேவதி வேண்டா வெறுப்பாக காலை காட்ட கார்த்திக் மெட்டி போடுகிறான்.
அடுத்து இவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு சாமுண்டீஸ்வரி நேராக குடோனுக்கு வருகிறாள். அங்கு மகேஷ் அடைத்து வைத்திருக்க அவன் சாமுண்டீஸ்வரியை பார்த்ததும் என்னை காப்பாத்துங்க என சத்தம் போடுகிறான்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு முன்பே ரேவதிக்கு குழந்தையா? திடீர் ட்விஸ்ட்.. வில்லன் என்ட்ரி! கார்த்திகை தீபம் அப்டேட்!

சாமுண்டீஸ்வரி நீ கேடுகெட்டவன் என தெரிந்து தான் அடைத்து வைத்திருக்கேன்.. கொஞ்ச நாளைக்கு அமைதியா இரு, நானே விட்டுடுறேன் என்று சொல்லி கிளம்ப மகேஷ் அதிர்ச்சி அடைகிறான்.
இங்கே கார்த்திக் ரேவதி ஆகியோர் வீட்டு வாசலில் காத்திருக்க சாமுண்டீஸ்வரி வந்ததும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்கின்றனர். அரிசி படியை தட்டிவிட்டு வலது கால் எடுத்து வைத்து உள்ளே வர சொல்ல ரேவதி முடியாது என மறுத்து உள்ளே செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து பாருங்கள்.
இதையும் படிங்க: துப்பாக்கியை நெற்றியில் வைத்த சாமுண்டீஸ்வரி.. திருமணத்திற்கு ஓகே சொன்ன ரேவதி - கார்த்திகை தீபம் அப்டேட் !