தனது காவலாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக மீது குற்றச்சாட்டி சீமான் கொடுத்துள்ள பேட்டி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடலுறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக தெரிவித்தார். இதையடுத்து, சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராவதற்காக சம்மன் கொடுக்கச் சென்ற விவகாரத்தில், போலீசாரை நோக்கி துப்பாக்கியைக் காட்டிய சீமானின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஓசூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்,
என்ன விரட்ட வேண்டிய அவசியம் என்ன? இதுவரை அரசு எதில் இவ்வளவு தீவிரம் காட்டி உள்ளார்கள். சம்மன் ஒட்டியதை என் தம்பி கிளித்துள்ளார். நான் ஏற்கனவே விசாரணைக்கு வந்தவன் தானே, நாளை மறுநாள் வருவேன் என்றேன். நாளையே வர வேண்டுமென்றால் வர முடியாது. அந்த பெண்ணையும், என்னையும் நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும், மீண்டும் விசாரித்தால் அதை தான் கூறுவேன், விசாரிக்காமலேயே இதுதான் நடந்தது என்கிறீர்கள். இதற்கு அஞ்சி பயந்து ஓடுவேன் என நினைக்கிறார்கள்.
இதையும் படிங்க: சாரி கேட்ட சீமான் மனைவி ..! என்ன சாரி? என்று கதவை வேகமாக அடிச்ச போலீஸ்..!

நாளை வர முடியாது உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என காவல்துறைக்கு சவால்விடுத்தார். திமுக ஆட்சி நேரத்தில் தான் இந்தம்மா வரும், ஜெயலலிதா, எடப்பாடியார் அதிமுக 10 ஆண்டு ஆட்சியில் ஏன் வரவில்லை. தேர்தல் வந்தால் வருவார், என்னை சமாளிக்க முடியாததால் இந்தம்மாவை (விஜயலட்சுமி) கூட்டி வந்து நிறுத்துகிறார்கள், பெரியார் வாங்கிய அடியில் என்ன செய்வதென தெரியாமல் இந்தம்மாவை அழைத்து வருகிறார்கள். விசாரித்து தானே தீர்ப்பு எழுத வேண்டும், விசாரணைக்கு முன்பே எழுதினால் எப்படிவிசாரிக்க வேண்டும் விசாரணையில் குற்றச்சாட்டிற்கான சான்றை கேட்க வேண்டும், சான்று படி நிரூபித்து குற்றம் குறித்து சொல்ல வேண்டும்.

என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து திமுக அரசு தன்னைத் தானே அசிங்கப்படுத்திக்கொள்கிறது. அண்ணா பல்கலைக்கழகம், பொள்ளாச்சி விவகாரத்தில் இதுபோன்ற எந்த அவசரத்தையும் போலீசார் காட்டவில்லையே? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், இந்த நாடகத்தை பார்க்க தான் போறேன், நாளை ஆஜராவீர்களா என்கிற கேள்விக்கு, நாளை தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம் உள்ளது. வளசரவாக்கம் காவல் நிலையம் அங்கே தானே இருக்கும், நான் இங்கே தானே இருப்பேன்.. வந்த தீர வேண்டுமென்றால் வர முடியாது என்றார்.
இதையும் படிங்க: ஆவேசமாக உள்ளே புகுந்த இன்ஸ்பெக்டர்..! பளிச் பளிச் என அறை..! கைது செய்யப்பட்ட சீமான் காவலர்..!