இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி யாரும் என்கூட வர வேண்டாம் என்று சொல்லி தனியாக சென்னை கிளம்பி சென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, முத்துப்பாண்டி சண்முகத்திடம் அவ உன்னை விட்டுட்டு போகணும்னு நினைச்சிருந்தா என்னைக்கோ போய் இருப்பா.. அவ உனக்காக தான் போகாமல் இருக்கா அதை நீ தான் புரிந்து கொள்ளணும் என்று சொல்கிறான்.
அவ நீ வருவ என்ற நம்பிக்கையில் தான் தனியா போய் இருக்கா என்று வைகுண்டம் சொல்ல, சண்முகம் தான் செய்த தவறை புரிந்து கொள்கிறான். பரணி அமெரிக்கா போறேன் என்று சொன்னதும் அவளுக்கு துணையாக நான் நின்னு இருக்கனும் என்று நினைக்கிறான்.
இதையும் படிங்க: சண்முகம், சௌந்தரபாண்டி இடையே உருவாகும் மோதல்! பரணி எடுத்த முடிவு - அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்!
பிறகு நீ இந்த உலகத்துல எந்த மூளைக்கு போனாலும் நான் வருவேன் என்று சொல்லி சென்னைக்கு கிளம்பி செல்கிறான். இதையடுத்து பரணி விசா ப்ராசஸ்க்காக லைனில் நின்று கொண்டிருக்க சண்முகம் ஆட்டோவில் வந்து இறங்குகிறான்.
பரணி இங்க எதுக்கு வந்த? என்று கேட்க என் பொண்டாட்டிக்காக வந்ததாக சொல்கிறான். நான் செய்தது தப்பு தான் என மன்னிப்பு கேட்கிறான், இவ்வளவு பேர் இருக்காங்க நாளைக்கு பார்த்துக்கலாம் வாங்க என்று கூப்பிடுகிறான்.
அடுத்து பரணியிடம் சாப்பிட்டியா என்று கேட்க அவள் இல்லை என்று சொல்ல சண்முகம் லைனில் நிற்கும் அத்தனை பேருக்கும் டிபன் வாங்கி வந்து கொடுக்கிறான். எல்லாருக்கும் சண்முகத்தை பிடித்து போக அந்த தம்பி தான் இவ்வளவு கெஞ்சுதே என்று அவனுக்கு சப்போர்ட் செய்து பேசுகின்றனர். பரணி உங்களுக்கு இவனை பத்தி தெரியாது என சொல்கிறாள்.
அடுத்து விசா ப்ராசஸ் முடிந்ததும் ரெண்டு பேரும் பீச்சுக்கு செல்கின்றனர், சண்முகம் நீ எங்க வேணா போ.. நான் உனக்கு துணையா இருப்பேன் என்று வாக்கு கொடுக்கிறான். பிறகு பரணி பீச்சில் கால் நனைக்க பெரிய அலை அவளை கீழே தள்ள சண்முகம் அவளுக்கு என்னாச்சு என அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
இதையும் படிங்க: சௌந்தரபாண்டியின் சதி.. சண்முகம் சமாளிக்கப்போவது எப்படி? அண்ணா சீரியல் எபிசோட் அப்டேட்!