மதுரையை பூர்வீகமாகக் கொண்ட கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி பல நடிகர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்துள்ளார். இவர் கே.பாலசந்தர் மூலம் 'புன்னகை மன்னன்' திரைப்படத்தில் அறிமுகமானார்.

தொடர்ந்து, வேலைக்காரன், மூங்கில் கோட்டை, உன்னை சொல்லி குற்றமில்லை என சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் ரஜினிகாந்த் நடித்த ப்ளட் ஸ்டோன் என்ற ஹாலிவுட் படத்திலும் ஹுசைனி வேலை செய்துள்ளார். விஜய்யின் பத்ரி படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த ஹுசைனி விஜய்க்கு உடற்பயிற்சி பயிற்சியாளராக நடித்திருந்தார்.மேலும் பலருக்கு வில் வித்தை பயிற்சியையும் அவர் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: எனக்காக இதை செய்யுங்க விஜய்! மரணப்படுக்கையில் கோரிக்கை வைத்த ஷிகான் ஹூசைனி!
இந்நிலையில் தான் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஷிகான் ஹுசைனி சமீபத்தில் கூறி இருந்தார்.

அதில், தனக்கு ரத்த புற்றுநோய் வந்திருக்கிறது என்றும் 4 வது நிலையை அடைந்துவிட்டதாகவும், இதற்கு மொத்தம் மூன்று காரணங்கள் சொல்வதாகவும் தெரிவித்தார். தான் ஒருநாள் வாழ்வதற்கு 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் வேண்டும் என்றும் இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோடு இருப்பேன் எனவும் கூறினார்.

தனக்கு மன தைரியம் அதிகம் உள்ளதாக பேசிய ஹுசைனி, பவன் கல்யாணக்கும், விஜய்க்கும் கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஷிகான் ஹுசைனிக்கு வீடியோ காலில் அழைத்து ஆறுதல் கூறியுள்ளார்.அதில், நல்லா இருங்க. எதுக்கும் பயப்படாதீங்க. உங்க பேஸ்புக் வீடியோ டெய்லி பார்ப்பேன் என்றும் நீங்கள் ஒரு பாசிட்டிவான நபர் என்றும் என் பள்ளி படிப்பில் இருந்து உங்களை பார்த்து வருகிறேன் எனவும் கூறினார்.

மகிழ்ச்சியாக இருங்கள், கடவுளிடம் உங்களுக்காக பிராத்தனை செய்து வருகிறேன் என தெரிவித்தார். மேலும், மனச விட்டுறாதீங்க என அண்ணாமலை கூறியதற்கு நான் எதற்கும் பயப்படவில்லை என்றும் தனக்காக நேரம் ஒதுக்கி பேசியமைக்கு நன்றி எனவும் ஷிகான் ஹுசைனி தெரிவித்தார். எப்போதும் உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என அண்ணாமலை தைரியம் கூறினார்.
இதையும் படிங்க: 'மு.க.ஸ்டாலின் அவர்களே...இது பெரிய முட்டாள்தனம்..!' அண்ணாமலை ஆத்திரம்..!