மின்சார விநியோக பயன்பாட்டு நிறுவனங்களின் நம்பகத்தன்மை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மாநில அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் இரண்டாவது கூட்டம் மும்பையில் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் மகாராஷ்டிராவின் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் ஆகியோர் தலைமை தாங்கினர்.தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, உத்தரப் பிரதேச எரிசக்தித் துறை இணை அமைச்சர் சோமேந்திர தோமர், மகாராஷ்டிர எரிசக்தித் துறை இணை அமைச்சர் மேகனா சாகோர் போர்டிகர், ஆந்திர எரிசக்தித் துறை அமைச்சர் கோட்டிபட்டி ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபாத், மின்சாரச் செலவுகளைக் குறைக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை (RE) பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை பற்றி எடுத்துரைத்தார். மின்சார கொள்முதல் மேம்படுத்தலுக்கான செயற்கை நுண்ணறிவு, அரசாங்க நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதற்கான வழிமுறையை நிறுவுதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாடு, எரிசக்தி சேமிப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் (RDSS) கீழ் பணிகளை விரைவுபடுத்துதல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது பற்றியும் விளக்கிக் கூறினார்.
கூட்டத்தில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இக்கூட்டத்தை மும்பையில் நடத்தியதற்காக நன்றி தெரிவித்தார். இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் நாட்டின் விநியோகத் துறையை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுவதில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஃபட்னாவிஸ் பாராட்டினார். கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களின் அமைச்சர்களும் பேசினர்.
இதையும் படிங்க: தம்பி கண் எதிரே இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.. முன்னாள் காதலன் வெறிச் செயல்..!

இக்கூட்டத்தில் தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னாவிஸ் அருகே செந்தில் பாலாஜி அமர்ந்திருந்தார். பாஜக ஆளும் மாநிலங்களின் அமைச்சர்களும், பாஜக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். என்றாலும் அவர்களைவிட செந்தில் பாலாஜிக்குதான் முதல்வர் ஃபட்னாவிஸ் அருகே இருக்கை போடப்பட்டிருந்தது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இங்கு ஏழாம் பொருத்தம்தான். நேற்று கோவை வந்த உள் துறை அமைச்சர் அமித் ஷா, செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார். பாஜகவினர் செந்தில் பாலாஜியைக் குறி வைத்து விமர்சித்து வரும் நிலையில், பாஜக முதல்வர் ஃபட்னாவிஸ் அருகே செந்தில் பாலாஜி அமர வைக்கப்பட்டிருந்தது, கவனிக்கத்தக்க அம்சம் ஆகியிருக்கிறது.
இதையும் படிங்க: அமாவாசை...பேசுறது நீதானா ? லேசா எடுத்துக்காதீங்க என்னை..! பாஜகவை கடுமையாக எச்சரிக்கும் ஷிண்டே..!