''தமிழ்நாட்டின் சாபக்கேடு 'டூப்' போலீசான அண்ணாமலை'' என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சாடியுள்ளார்.
இதுகுறித்த்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தமிழ்நாடு காவல்துறை. அண்ணாமலை போல டூப் போலீஸ் அல்ல. காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பல்வேறு கொள்ளையர்களை, பல்வேறு கொலைகாரர்களை கரணம்போட்டு செல்பவர்களை துரத்தி பிடித்து வேட்டையாடிக் கொண்டு இருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தை விட்டு அண்டை மாநிலங்களுக்கு சமூக விரோத சக்திகள் ஓடிக் கொண்டு இருக்கின்றன.

காக்கிச் சட்டைக்கு தூக்கம் இருக்காதுதான். ஏனென்றால், இதுபோன்றவர்களிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்காக எல்லையிலே இருக்கிற ராணுவ வீரர்களை போல நமது காக்கிச்சட்டை அணிந்த நமது காவல்துறையினர் இந்த ஆட்சியையும், தமிழக மக்களையும் அமைதி பூங்காவாக வைத்திருப்பதில் அண்ணாமலைக்கு உடன்பாடு இல்லை என்பதால்தான் அவர்கள் தூங்க மாட்டார் என்று சொல்கிறார். உண்மைதான். போலீசார் தூங்குவது கிடையாது. தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கு முதலமைச்சரின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு தூக்கமில்லாமல்தான் தமிழ்நாடு காவல்துறை இருந்து வருகிறது.
இதையும் படிங்க: தைரியம் இருந்தா என்னை கைது பண்ணுங்க... ஸ்டாலினுக்கு சவால் விட்ட அண்ணாமலை!!

விஜய், திமுகவை பாஜகவின் 'பி' டீம் என்கிறார். அவரை களத்திற்கு வரச் சொல்லுங்கள். யார் தமிழகத்தின் கொள்கை, கோட்பாடுகளை லட்சியங்களை காப்பாற்றுகிறார்கள் என்பது உங்களுக்கே புரியும். ஊடகத்திற்காக அவர்கள் பேசுகிறார்கள். தமிழகத்தின் உரிமைக்காக நாங்கள் உறுதியாக நிற்போம். மத்திய அரசு பணம் தரவில்லையா? அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்களுடைய ஜிஎஸ்டி வரிக்கு ஏற்றார்போல நிதி ஒதுக்கவில்லையா? அதைப்பற்றி கவலைப்படவில்லை. வெள்ள நிவாரணம் கேட்டதில் நூறில் 5 மடங்குகூட தமிழகத்திற்கு தரவில்லையா? அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

ஒட்டுமொத்த மத்திய அமைச்சர்களையும் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கிறீர்களா? வாருங்கள்... வந்து பாருங்கள் எல்லா வகையிலும் தன்மானம் காக்கின்ற முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக மண்ணில் ஆட்சி செய்கிற வரை எங்களை அசைக்க முடியாது. திமுகவுக்கு 2026ல் 200 நிச்சயம். 234 என்பதில் லட்சியத்தோடு எங்களது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
டூப் போலீஸ்தான் வாய்க்கு வந்தை எல்லாம் பேசிக் கொண்டிருக்கும். அண்ணாமலை தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய சாபக்கேடு. இது போன்ற மாநில தலைவர்கள் அரசியலில் நாகரீகத்தை மறந்து லாவணி பாடுகின்ற, சாலையோர கச்சேரி நடத்துபவர்கள் போல.

அவர்கள் பேசுவதற்கெல்லாம் நாம் பதில் கூறிக் கொண்டிருந்தால் ஆகாது. எத்தனையோ வழக்குகளை சந்தித்து ஆர்ப்பரிப்போடு எழுந்த இயக்கம் திமுக. எங்களுக்கு மடியில் கனமில்லை ஆகையால், வழியில் பயமும் இல்லை. இதுபோன்ற மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் அஞ்சி யாரும் பயந்து வீட்டிலேயே அமர்ந்துவிட மாட்டார்கள். முன்பு விட வேகமாக எட்டு கால் பாய்ச்சலில் திமுக பயணிக்கும்'' எனத் தெரிவித்துளார்.
இதையும் படிங்க: அமலாக்கத் துறை அறிக்கையால் ஆடிபோன திமுக.. தூக்கி எறியப்படும் திமுக ஆட்சி.. எல்.முருகன் ஆவேசம்!!