தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி காட்டி மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். விஜய்யின் அரசியல் வருகை ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இருந்தபோதிலும் இனி விஜய்யை திரையில் பார்க்க முடியாது என்ற கவலையும் ரசிகர்களுக்கு இருந்தது. இந்த நிலையில் விஜய் கடைசி படத்தை இயக்குநர் எச்.வினோத் எடுக்கப்போவதாக கூறப்பட்டது. அதன்படி, விஜய்யின் 69-வது படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ஜன நாயகன்' என்று பெயரிடப்பட்டது. மேலும் இதில், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் உள்ளிட்டோர் நடிக்கினறனர்.
இதையும் படிங்க: ரஜினிக்கே அல்வா..! உங்களுக்கு பிரைம்னா.. எங்களுக்கு..? விற்பனையானது ஜனநாயகன் படம்..!

கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின. இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், அரசியல் திரில்லர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜனநாயகன் திரைப்படம் 2026 ஆண்டு ஜனவரி 9ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்கில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ரசிகர்கள் ‘இது தளபதி பொங்கல்’ என கொண்டாடி வருகின்றனர். 2026ல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பே, ஜனநாயகன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்தும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: படம் பிளாப்பு ஆனா பாட்டு ஹிட்டு... சன் பிக்சர்ஸ் பதிவிட்ட சாதனை புகைப்படம்..!