மதுரை வருமானவரித்துறை ரெகுலேஷன் கிளப் சார்பில் BBகுளம் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஆணையர் சஞ்சய்ராய், முதன்மை ஆணையர் வசந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கிவைத்தார்.நிகழ்ச்சியில் பேசிய நடிகர் வடிவேலு இருக்கிறவங்க கிட்ட வரியை போட்டு தள்ளுங்க ஏழை எளியவருக்கு கொஞ்சம் பார்த்து போடுங்க என வருமானவரித்துறை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார் . ரசிகர்கள் தங்களது விருப்ப பாடல்களை பாட வேண்டும் என கேட்டபோது மாமன்னன் பட பாடலையும் எட்டணா இருந்தா எட்டு ஊரு என் பாட்டை கேட்கும் என்ற பாடலையும் பாடியதோடு எம்ஜிஆர் பாடலையும் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

அப்போது ரசிகை ஒருவர் படத்தில் காமெடியாகவும் நடிக்கிறீர்கள் மாமன்னன் போன்ற படத்தில் நடித்திருக்கிறீர்கள் உங்களுடைய உண்மையான கேரக்டர் என்ன சார் என கேள்வி எழுப்பியபோது நான் மாமன்னன் படத்தில் வரும் வடிவேல் போல அதிகளவிற்கு கஷ்டப்பட்டு இருக்கேன் அதனால் காமெடி நடிகராக உயர்ந்திருக்கிறேன் என்னுடைய உண்மையான தோற்றம் என்பது மாமன்னன் வடிவேலு தான் என பதிலளித்தார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு விஜய் சார் அரசியலுக்கு போய் விட்டார், அவர் இடத்தை நீங்கள் நிரப்பிவீர்களா? என்ற கேள்விக்கு வேற ஏதாவது பேசுவோமா என்றும் அஜித் கார் விபத்தாயிருக்கிறதே?என்ற கேள்விக்கும் வேற ஏதாவது பேசுவோமா என்று அதிர்ச்சி பதில் அளித்துள்ளார் .இத்தனைக்கும் அஜித் ,விஜய் உடன் பல படங்களை நடித்திருக்கும் வடிவேலு இவ்விருவர் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கவில்லை .தொடர்ந்து பேசிய வடிவேலு இப்போதெல்லாம் தேர்வுசெய்து படங்களை நடிக்கிறேன். மாமன்னன் ஒரு மாதிரியான கதாபாத்திரம் , கேங்கர்ஸ் முழு நீள நகைச்சுவை படம். ரொம்ப சிறப்பாக இருக்கும். கேங்கர்ஸ் குழந்தை குட்டிகளோடு சேர்ந்து எல்லாரும் ரசிக்கும் அளவிற்கு பிரமாதமாக வந்துள்ளது என்றார்.

தமிழ் சினிமாவில் முழு நீள காமெடி படங்கள் குறைந்துவிட்டதே? என்ற கேள்விக்கு பதில் அளித்த வடிவேலு மூன்று பரிமாணங்களில் நடித்து வந்தேன். தனி காமெடி விட்டுவிட்டேன் , டிராக் காமெடி பண்ணேன், ஹீரோக்கள் காம்பினேஷன் பண்ணினேன், தனியாக ஹீரோ என மூன்று கைவசம் வைத்திருக்கிறேன். தற்போது டிராக் காமெடி இல்லை அதனால் பல கதையோடு காமெடி வருகிறது. ஹேங்கர்ஸ் படம் என்பது ஆதவன் படம் மாதிரி, முழுக்க முழுக்க இந்த மாதிரி கதைகளை செலக்ட் பண்ணிக்கிட்டு நடிச்சுகிட்டு இருக்கேன் என்றார்.
இதையும் படிங்க: 40 வயசுலயும் 20 வயசு பீலிங்! மாடர்ன் ட்ரெஸில் த்ரிஷா கொடுத்த முரட்டு போஸ்!