தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநிலங்களவை திமுக எம்.பி. வில்சன் இது தொடர்பாக இன்று கேள்வி எழுப்பினார். "சாலையை அமைக்க முதலீடு செய்தவர்கள் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடிகள் மூலம் தொகையை வசூலிக்கின்றனர். முதலீடு தொகை முழுவதுமாக வந்த பிறகு சுங்கச்சாவடிகள் அகற்றப்படுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, "முன்பு டோல் என்று அழைக்கப்பட்ட கட்டணம் தற்போது பயன்பாட்டு கட்டணம் என்று மாற்றப்பட்டுவிட்டது. இது நிரந்தரமான நடவடிக்கை ஆகும். முதலீடு மீண்டும் கிடைத்துவிட்டால் சுங்கச்சாவடிகளை மூடுவது தொடர்பாக எந்த யோசனையும் அரசுக்கு இல்லை. தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் - 2008ன்படி, ஒரு சாலை தனியார் உதவியுடன் அமைக்கப்பட்ட பிறகு அதற்கான கட்டணத்தை ஒப்பந்த காலம் முடியும் வரை வசூலிக்கலாம்.

ஒப்பந்தம் முடிந்த பிற்ச்கு அரசு நேரடியாகவோ, அரசு கை காட்டும் அமைப்போ கட்டணம் வசூலிக்கும். இந்தக் கட்டணம் ஒவ்வோர் ஆண்டும் திருத்தி அமைக்கப்படும். எனவே, சுங்க சாவடியை மூடுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் 1,046 கி.மீ., துாரத்துக்கு, 38,359 கோடி ரூபாய் செலவில் 48 நெடுஞ்சாலை பணிகள் நடைபெறுகின்றன. இது 2027 பிப்ரவரிக்குள் முடியவடையும்," என்று நிதின் கட்கரி கூறினார்.
இதையும் படிங்க: பள்ளி வாகனங்களுக்கு பிரத்யேகமாக போக்குவரத்து கொள்கை.. மாநிலங்களவையில் வலியுறுத்தல்..!
இதையும் படிங்க: அன்புமணிக்கு மீண்டும் எம்.பி. பதவி.. திமுகவிடம் கேட்குமா பாமக.? ராமதாஸ் ரியாக்ஷன் என்ன?