அதாவது, ரவுடிகள் வீராவை திசை திருப்பி, நகையை அவளது பைக்குள் போட்டு விடுகின்றனர், இது பிரச்சனையாக வைஜெயந்தி வீராவின் பையில் இருந்து நகையை எடுக்க வீராவும் வைகுண்டமும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ஓ நீ திருடியா என வீராவை கைது செய்யும் வைஜெயந்தி அவளை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து உட்கார வைக்கிறாள். இந்த விஷயம் சண்முகத்துக்கு போன் மூலம் தெரியவர சண்முகம் பேரதிர்ச்சி அடைகிறான்.

உடனே ஸ்டேஷனுக்கு கிளம்பி வரும் அவன் இதெல்லாம் வைஜெயந்தி திட்டமாக கூட இருக்கலாம் என சந்தேகப்படுகிறான். வீரா மேல கேஸ் எழுதிட்டா அவளுடைய கனவு மொத்தமா இல்லாமல் போய்டும், அதுக்கு முன்னாடி உண்மையை கண்டு பிடிக்கணும் என சொல்கிறான்.
இதையும் படிங்க: இசக்கிக்கு மருந்து கொடுக்கும் பாக்கியம் - முத்துப்பாண்டி போட்ட கண்டிஷன்! அண்ணா சீரியல் அப்டேட்!
உனக்கு போலீஸ் மூளை.. அங்க கண்டிப்பா ஏதாவது தப்பா நடந்திருக்கும், சந்தேகப்படுற மாதிரி எதாவது நடந்துச்சா யோசி யோசி என யோசிக்க சொல்கிறான். வீராவும் சம்பவ இடத்தில நடந்தது என்ன என்று யோசிக்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.
இதையும் படிங்க: Anna Serial: சண்முகம் குடும்பத்திற்கு வந்த புது சோதனை; காத்திருக்கும் திருப்பங்கள்? அண்ணா சீரியல் அப்டேட்!