நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக முட்டி மோதி ஆட்சியைப் பிடித்த நிலையில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இருப்பினும் கடந்த தேர்தலை காட்டிலும் இந்த முறை சற்று அதிக எண்ணிக்கையில் காங்கிரஸ் சீட்டுக்களை பிடித்ததால் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது காங்கிரஸ் கட்சியினர் சற்று மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆக இருந்த சுப்ரியா ஸ்ரீ நடே வின் செயல்தான் அந்த சமயத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அளவில் தேர்தல் வியூகங்கள் அமைத்து களம் கண்டது. இதில் வியூக வகுப்பாளராக சுனில் கணக்கு ஒழுகும் பாரும் எனப்படும் சோசியல் மீடியா தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொள்ளும் அமைப்பின் தலைவராக சுப்ரியா ஸ்ரீநெடே இருந்தார்.
இதையும் படிங்க: டெல்லி தேர்தலில் ஹாட்ரிக் ‘0’: காங்கிரஸ் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? ஓர் அலசல்
தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது காங்கிரஸ் தோற்றுவிடும் என தெரிந்தும் சில இடங்களில் அதிக சீட்டுகளை பெற்றதால் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்ற சுப்ரியா தனது கைகளை உயர்த்தியபடி டான்ஸ் ஆடிக் கொண்டே காங்கிரஸ் வார்ரோமில் உள்ள ஊழியர்களோடு மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. அப்போது வைரலானது அதுமட்டுமின்றி தொடர்ந்து காங்கிரஸ் தொடர்பான விஷயங்களில் மிக அழுத்தத்தோடும் ஆவேசத்தோடும் பாஜகவுக்கு பதிலடி கொடுத்து வந்தார் சுப்ரியா ஸ்ரீநடே .சுப்ரியாவின் அதிரடி நடவடிக்கைகளால் கடுமையான எரிச்சலுக்கும் கோபத்துக்கும் ஆளாகியுள்ளனர் பாஜகவினர்.

எனவேதான் தொடர்ந்து அவரை மீம்ஸ்கள் மூலமாகவும் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களிலும் பாஜகவினர் காங்கிரஸ் தோல்வியுறும் போதெல்லாம் சுப்ரியாவின் அந்த வைரல் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு கலாய்த்து தள்ளி வந்தனர்.
தற்போதும் டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஒரு இடம் கூட பெறாத நிலையில் படு பாதாள தோல்வி அடைந்துள்ளது. இப்போதும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியினர் சுப்ரியாவை ஒரு காமெடி பீஸ் ஆக சித்தரித்து மீம்ஸ்கள் வெளியிட்டு வருவது தற்போது நாடு முழுவதும் வைரல் ஆகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆன சுப்ரியா ராகுல் காந்தி மற்றும் தலைமையிடம் மிக நெருக்கமானவர். ஆவார் ஏற்கனவே 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தவராவார். சுப்பரியா ஸ்ரீநடே உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ் கஞ்ச் என்ற பகுதியைச் சேர்ந்த இவர், தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக உள்ளார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பு இந்தியா டுடே மற்றும் என் டி டி வி, டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய செய்தி நிறுவனங்களில் பத்திரிகையாளராக 18 ஆண்டுகள் பணியாற்றியவர் சுப்ரியா ஸ்ரீடே என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வீணாகிப்போன ராகுல், பிரியங்கா பிரச்சாரம்.! விழி பிதுங்கி நிற்கும் காங்கிரஸ் கட்சி