கடந்த 3 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்றே சரிந்துள்ளது நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.
நேற்றைய வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,310 ரூபாய்க்கும், சவரன் 66,480 ரூபாய்க்கும் விற்பனையானது.
தங்கம் விலை நிலவரம் (21/03/2024):
இன்றைய நிலவரப்படி, (வெள்ளி கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 40 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 270 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 66 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இதையும் படிங்க: வரலாறு காணாத உச்சம்; 66 அயிரத்தைக் கடந்தது தங்கம் விலை - காரணம் என்ன?

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 44 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 021 ரூபாய்க்கும், சவரனுக்கு 352 ரூபாய் குறைந்து 72 ஆயிரத்து 168 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்:

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் சரிந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 2 ரூபாய் சரிந்து 112 ரூபாய்க்கும், கிலோவிற்கு 2 ஆயிரம் ரூபாய் சரிந்து ஒரு கிலோ ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பழிவாங்கும் வரிகள் காரணமாக வட்டி விகிதங்களைக் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி குறைக்கவில்லை. இதனால் டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது. இதனையடுத்து முதலீட்டாளர்களின் கவனம் டாலர் பக்கம் திரும்பியுள்ளதால், தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
இதையும் படிங்க: அடிச்சது ஜாக்பாட்... ஏறிய வேகத்தில் சரசரவென சரிந்த தங்கம் விலை... ஒரே நாளில் இவ்வளவு குறைவா?