தங்கம் விலை இன்று 67 ஆயிரத்தை நெருங்கி வருவது நகை வாங்க காத்திருப்போரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்றைய வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,340 ரூபாய்க்கும், சவரன் 66,880 ரூபாய்க்கும் விற்பனையானது.
தங்கம் விலை நிலவரம் (29/03/2024):
இன்றைய நிலவரப்படி, (சனிக்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 20 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 360 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 72 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இதையும் படிங்க: தலைகீழ் திருப்பம்... தங்கம் கொடுத்த தடாலடி ட்விஸ்ட்... வெள்ளியும் சதி பண்ணுதே...!

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 37 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 120 ரூபாய்க்கும், சவரனுக்கு 296 ரூபாய் அதிகரித்து 72 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்:

தங்கத்தைப் போல் அல்லாமல் வெள்ளி விலை சரிந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமிற்கு 1 ரூபாய் குறைந்து 113 ரூபாய்க்கும், வெள்ளி கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?

தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களாக சரிந்து வந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் பொருளாதார கட்டண கொள்கைகள் காரணமாக, மந்தநிலை உருவாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. இந்த நிலையில் பங்குச்சந்தைகள் பாசிட்டிவாக செயல்பட தொடங்கியதை அடுத்து தங்கத்தின் விலை சரிய தொடங்கி நிலையில் மீண்டும் உயர தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: சரிவுக்கு சட்டென சடன் பிரேக் போட்ட தங்கம்... 2வது நாளாக கிடுகிடு உயர்வு!