கடந்த சில வாரங்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று கணிசமான அளவு குறைந்துள்ளது.
புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறி வந்தது. குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் ஒரு சவரன் தங்கம் விலை 60 ஆயிரம் ரூபாயை நெருங்கியது. இனி தங்கத்தை பார்க்க மட்டும் தான் முடியும் போல, என நடுத்தர மக்கள் ஏக்கமடைந்து வந்த நிலையில், இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் தங்கம் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்:

சென்னையில் இன்று (சனிக் கிழமை) சில்லறை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் கிராமிற்கு 15 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 435 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 59 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 காரட் சுத்த தங்கம் கிராமிற்கு 16 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 111 ரூபாய்க்கும், சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து 64 ஆயிரம் 888 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க: Gold Rate Today: இல்லத்தரசிகளுக்கு செம்ம ஷாக்; எகிறி அடிக்கும் தங்கம் விலை; இவ்வளவு உயர்வா?
வெள்ளி விலை நிலவரம்:

சென்னையில் இன்று (சனிக் கிழமை) வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி, ஒரு கிராம் 104 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
காரணம் என்ன?
இந்தியர்களை பொறுத்தவரை, தங்கம் என்பது வெறும் முதலீடு மட்டுமல்ல, பாரம்பரியம் மற்றும் பாதுகாப்பின் விஷயமாகும். எனவே, தங்க விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் எப்போதும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.

காசா - இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம் முதலீட்டாளர்களை நிம்மதி பெருமூச்சு விடவைத்துள்ளது. மற்றொருபுறம் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்பதால் டாலர் மற்றும் பிட்காயின்களின் மதிப்பு உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்களின் தங்கம் மீதான கவனம் சற்றே குறைந்துள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகையில் தங்கம் கொடுத்த சர்ப்ரைஸ்; இல்லத்தரசிகளே நகை வாங்க தயாரா?