தமிழக கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 160-க்க்கும் மேற்பட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தற்போது வரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு 504 இந்திய மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியா வந்த இலங்கை அதிபர் அநூரா திஸ்ஸநாயக்கேவிடம், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்படுவதற்கு இருநாடும் இணைந்து தீர்வு காண வேண்டும் என எடுத்துரைத்திருந்தார்.

இந்த நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அரசுக்கு மத்தியில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து சிறையிலிருந்த 20 இந்திய மீனவர்கள் இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு அங்கு தற்காலிக குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர்கள் கொழும்புவிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்கு பல்வேறு பாதுகாப்புச் சோதனைகளுக்கு பின்னர் வெளியே வந்த புதுக்கோட்டை, இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 20 மீனவர்களையும் மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று அவரவர் சொந்த ஊருக்கு தனித்தனி வாகனங்களில் அனுப்பி வைத்தனர் .
இதையும் படிங்க: சும்மா ஜெட் வேகத்தில் இனி ரயில் பயணம் ..மாஸ் அறிவிப்பு வெளியிட்ட இந்திய ரயில்வே..!
இதையும் படிங்க: ஒரு தொழிலதிபருக்காக சதி... மாலத்தீவில் ஆட்சியை கவிழ்த்த ராஜீவ் காந்தி.. கூலிப்படையான ஈழத் தமிழர்கள்..!