தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சரிந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் (27/02/2024):
கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை தற்போது தொடர்ந்து 2வது நாளாக இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருவது நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தங்கம் வாங்க தயாரா? ... உடனே நகை கடைக்கு ஓடுங்க...!
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,050 ரூபாய்க்கும், சவரன் 64,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (வியாழன் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 40 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 010 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 64 ஆயிரத்து 080 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 43 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 738 ரூபாய்க்கும், சவரனுக்கு 344 ரூபாய் குறைந்து 69 ஆயிரத்து 094 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்:

தங்கத்தை போல் அல்லாமல் வெள்ளி விலை மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடித்து வருகிறது. வெள்ளி விலை கிராம் 106 ரூபாய்க்கும், கிலோ ஒரு லட்சத்து ம ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
டாலரின் மதிப்பு மீண்டும் உயர்ந்து வருவது தங்கத்தின் மீதான முதலீடுகள் சரிய காரணமாக அமைந்துள்ளது.

பொருளாதார நிச்சயமற்ற தன்மை, புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அதிகரித்து வரும் வர்த்தக மோதல்களுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிட சொத்துக்களை நாடுவதால் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான உயர்வு ஏற்பட்டுள்ளது, இது உலகளாவிய பணவீக்கத்தைத் தூண்டும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மெதுவாக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இதையும் படிங்க: வரலாற்று உச்சம்... தங்கம் வாங்கவே அச்சம்... சவரன் விலையைக் கேட்டாலே தலைசுத்தும்...!