சோமேட்டோ நிறுவனம் ‘சோமேட்டோ டிஸ்ட்ரிக்ட் ஆப்’ ஐ வெளியிட்டது. இது வாடிக்கையாளர்கள் பொழுதுபோக்கு மற்றும் உணவின் அனுபவத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது ஆகும். திரைப்பட டிக்கெட் முன்பதிவு, நிகழ்வு முன்பதிவுகள் மற்றும் உணவகங்களில் டேபிள் புக்கிங் உள்ளிட்ட பல அம்சங்களை இந்தப் புதிய ஆப் ஒருங்கிணைக்கிறது.
இந்த வெளியீட்டின் மூலம், சோமேட்டோ பொழுதுபோக்கு மற்றும் சாப்பாட்டுத் தேவைகளுக்கான அனைத்து-இன்-ஒன் தீர்வை வழங்குகிறது, 'going-out' பிரிவில் அடியெடுத்து வைக்கிறது. சோமேட்டோ டிஸ்ட்ரிக்ட் ஆப் சௌகரியத்தையும் பல்வேறு வகைகளையும் ஒருங்கிணைக்கிறது. பயனர்கள் திரைப்படங்கள், கச்சேரிகள், நேரலை நிகழ்வுகள், விளையாட்டுகள், ஷாப்பிங் மற்றும் பலவற்றிற்கான டிக்கெட்டுகளை ஒரே தளத்தில் பதிவு செய்ய அனுமதிக்கிறது.
உணவகங்களில் உணவு முன்பதிவுகள் என பல அசத்தல் அம்சங்களை இணைத்து அறிமுகப்படுத்தி உள்ளது. ஆகஸ்ட் 2023 இல் Paytm இன் நிகழ்வுகள் மற்றும் டிக்கெட் வணிகத்தை ₹2,048 கோடிக்கு சோமேட்டோ கையகப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கையகப்படுத்துதலின் மூலம், Zomato நிகழ்வு-டிக்கெட் துறையில் தனது நிலையை உறுதிப்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு பெண்களிடம் மட்டும் இவ்வளவு தங்கமா ..? பிபியை எகிறவைக்கும் சர்வதேச ரிப்போர்ட்..!

அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே மளிகை விநியோகத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்சமயம், டிஸ்ட்ரிக்ட் ஆப் ஆனது Apple iOS பயனர்களுக்கு பிரத்தியேகமாக கிடைக்கிறது, எதிர்காலத்தில் Android பயனர்களுக்காக இதை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதுபற்றி கூறிய தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல், “இதனை "கேம் சேஞ்சர்" என்று அழைத்தார். இந்த செயலியானது, உணவு விநியோகத்தில் Zomatoவின் நிபுணத்துவத்தை, பொழுதுபோக்குத் துறையில் அதன் வளர்ந்து வரும் இருப்புடன் ஒன்றிணைத்து, ஒருங்கிணைந்த அனுபவத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார்.
ஒரே தளத்தில் உணவு மற்றும் பொழுதுபோக்கை இணைப்பதன் மூலம், பயனர்கள் தங்கள் ஓய்வு நேரங்களை அனுபவிக்கும் விதத்தை மறுவரையறை செய்வதாக Zomato டிஸ்ட்ரிக்ட் ஆப் உறுதியளிக்கிறது. இது மக்களிடையே புரட்சியை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: 2025ல் ரூ.90 ஆயிரத்தை தாண்டும் தங்கத்தின் விலை; அடித்துக் கூறும் நிபுணர்கள் - எப்போ வாங்கலாம்?