புத்தாண்டு பிறந்ததில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 640 ரூபாய் உயர்ந்து நடுத்தர மக்களையும், குடும்ப தலைவிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய தங்கம் விலை, இன்று குறைந்து அனைவரையும் குஷியாக்கியுள்ளது.
சென்னையில் இன்று (சனிக்கிழமை) சில்லறை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் கிராமிற்கு 45 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 215 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 57 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 காரட் சுத்த தங்கம் கிராமிற்கு 45 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 875 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 63 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் இன்று (சனிக்கிழமை) ஒரு கிராம் வெள்ளி விலை ஒரு ரூபாய் குறைந்து 99 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலையில் ஆயிரம் ரூபாய் குறைந்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க: 8% மேல் வட்டியை அள்ளித்தரும் சிறு சேமிப்பு திட்டங்கள்..! பாதுகாப்புக்கு கியாரண்டி.!
இதையும் படிங்க: பிஎப் பணத்தை எடுப்பது எப்படி? 2 நிமிடத்தில் எளிதாக எடுக்கலாம்.!