தமிழகத்தில் ஸ்கரப் டைபஸ்(Scrub Typhus) என்ற பாக்டீரியா தொற்று அதிகரித்து வருகிறது.
ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் கடிப்பதால் 'ஸ்கரப் டைபஸ்' வகை காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.
சமீப காலமாக வைரஸ் காய்ச்சல் போல் காய்ச்சல் பரவி வருகிறது. என்ன பரிசோதனை செய்தாலும் என்ன காய்ச்சல் என தெரியாமல் காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இது குறித்து சுகாதார துறை எச்சரித்துள்ளது. பொதுவாக
காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள் உடலில் காணப்பட்டால் அது ‘ஸ்கரப் டைபஸ்' நோயின் முக்கிய அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இந்த நோயின் தாக்கம் அதிகம் உள்ளது.
தமிழகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் ‘ஸ்கரப் டைபஸ்’ நோய் தாக்கம் உள்ளதாக கண்டறியபட்டுள்ளது.
மேற்கண்ட அறிகுறியுடன் காய்ச்சல் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையத்தை உடனடியாக அணுகும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
விவசாயிகள், வனப்பகுதியில் வசிப்போர், புதர் மண்டிய பகுதியில் வசிப்போர் இந்த வகை நோயால் பாதிக்கப்படலாம்.

நோய்க்கு மருத்துவர் பரிந்துரைப்படி அசித்ரோமைசின், டாக்ஸிசைக்கிள் மருந்து தரப்படுகிறது. வெறும் காலில் நடப்பது, புதர் மண்டிய பகுதிகளில் நடப்பது போன்றவைகளை தவிர்க்கவும், பயன்படுத்தும் நிலை வந்தால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், கால்,கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். காய்ச்சல் குறித்து பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் உரிய விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.